Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Egg Sandwich: வெறும் 10 நிமிஷம் போதும்… சூப்பரான முட்டை சான்விட்ச் செய்யலாம்!

How To make Egg Sandwich Recipes for Breakfast In Tamil: விறுவிறுப்பான காலத்தில், நாம்மில் பலருக்கு சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் கூட நேரம் கிடைப்பதில்லை. ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில், நெடியில் செய்யக்கூடிய புரதம் நிறைந்த ஒரு காலை உணவுக்கான ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

சட்டுனு தயாராகும் முட்டை சான்விட்ச் எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் முட்டை சான்விட்ச் எப்படி செய்யணும் என இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : kothamalli Vada: நொடியில் தயாராகும் கொத்தமல்லி வடை எப்படி தெரியுமா?

தேவையான பொருட்கள் :

முட்டை - 6.
பிரட் துண்டுகள் - 6.
எண்ணெய் - 6 ஸ்பூன்.
கடுகு பேஸ்ட் - 1 ஸ்பூன்.
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
மயோனெய்சு - 1/2 கப்.
லாக்டேசு இலை - 3.
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

  • சான்விட்ச் செய்வதற்கு முன்னதாக, 6 முட்டைகளை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து அவித்துக்கொள்ளவும்.
  • பின்னர் அவித்த இந்த முட்டைகளை ஓடு நீக்கி, தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • சான்விட்ச் ஃபில்லரை தயார் செய்ய, அடுப்பில் கடாய் ஒன்று வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் அவித்த முட்டைகளை பொடியாக நறுக்கி சேர்த்து வறுக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : Sambar Podi Recipe: வீடே மனக்குற மாறி சாம்பார் வைக்க சாம்பார் பொடி இப்படி அரச்சு பாருங்க.!

  • தொடர்ந்து இதனுடன் மிளகு பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.
  • காரம் அதிகம் விரும்புவோர் மிளகு பொடியை சற்று அதிகமாக சேர்த்து, 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்துவிடவும்.
  • பின்னர் இந்த சேர்மத்தை ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும். தொடர்ந்து இதனுடன் மயோனெய்சு மற்றும் கடுகு பேஸ்ட் சேர்த்தது நன்கு கிளறிக்கொள்ளவும்.
  • இதனிடையே பிரட் டோஸ்ட்டர் கொண்டு பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்துக்கொள்ளவும். டோஸ்டர் இல்லாவிடில், தோசை தவாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்துக்கொள்ளலாம்.
  • டோஸ்ட் செய்யப்பட்ட இந்த பிரட் துண்டுகளுக்கு மேல், லாக்டேசு இலை மற்றும் நாம் தயார் செய்து வைத்த சான்விட்ச் ஃபில்லரை (முட்டை கலவை) வைக்கவும்.
  • தொடர்ந்து அதற்கு மேல் மற்றொரு பிரட் வைக்க முட்டை சான்ட்விச் தயார்.

இந்த பதிவும் உதவலாம் : Meen kuruma Recipe: இந்த முறை மீன் குழம்பு இல்ல.. மீன் குருமா செய்யுங்க… இதோ ரெசிபி!

தயார் செய்து வைத்த சான்விட்சின் சுவையை கூட்ட, பிரட் துண்டுகளுக்கு இடையில் வெங்காயம் மற்றும் நறுக்கப்பட்ட முட்டைகோஸ் சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் தக்காளி சாஸ் உடன் சேர்ந்து இந்த சான்விட்சினை சுவையாக பரிமாறலாம்.

முட்டை சாப்பிடுவதன் நன்மைகள்

நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்

நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு ஆய்வின் படி, 2 வேகவைத்த முட்டைகளை 6 வாரங்களுக்கு உட்கொண்டால், அது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

முட்டையில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், இதன் நுகர்வு இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது என்று அர்த்தமல்ல. முட்டையை சாப்பிடுவது 70 சதவிகிதம் பேருக்கு கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது, அதேசமயம் 30 சதவிகிதம் பேர் மட்டுமே சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பை அதிகரிக்க முடியும்.

கண்களுக்கு நல்லது

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது, இது கண்களுக்கு நன்மை பயக்கும். பார்வையை மேம்படுத்த முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன்கள் மற்றும் பல வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : Poha Nuggets: ஒரு சூப்பரான மொறு மொறு ஸ்னாக்ஸ் அவல் நகெட்ஸ் எப்படி செய்யனும்?

எலும்புகளை பலப்படுத்துகிறது

வைட்டமின் டி முட்டையில் அதிக அளவில் உள்ளது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க இது ஒரு சூப்பர்ஃபுட் என்பதை நிரூபிக்க முடியும்.

மூளைக்கு நன்மை பயக்கும்

முட்டையில் கோலின் உள்ளது. மூளைக்கு உதவியாக இருக்கும். இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் தான் தினமும் முட்டை சாப்பிடுவது மூளையை கூர்மையாக்கும் என்று கூறப்படுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Antioxidant Rich Foods: சருமம் ஜொலிக்க வேண்டுமா.? ஆன்டி ஆக்ஸிடண்ட் எடுத்துக்கோங்க…

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content