வெறும் 15 நிமிஷம் போதும்! அருமையான சுவையில் ரவை மெதுவடை ரெடி.. இப்படி செஞ்சி பாருங்க

How to make rava medu vada at home: பொதுவாக வடை என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று தான். வடை வகைகளில் ஒன்றான மெதுவடை சுவையுடன் கூடிய ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளித் தருகிறது. இதில் வித்தியாசமாக ரவையைக் கொண்டு தயார் செய்யப்படும் ரவை மெதுவடை ரெசிபி தயாரிப்பு குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
வெறும் 15 நிமிஷம் போதும்! அருமையான சுவையில் ரவை மெதுவடை ரெடி.. இப்படி செஞ்சி பாருங்க


Rava medu vada recipe in tamil: தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவுப் பொருட்களில் ஒன்றாக மெதுவடை அமைகிறது. இது மெதுவான தோற்றம் மற்றும் மென்மையான உட்புறம் கொண்ட, டோனட் வடிவத்தில் தயாரிக்கப்படும் ஒரு சிறந்த ரெசிபியாகும். இதை ஒரு மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது ஆரோக்கியமான காலை உணவாக சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த மொறுமொறுப்பான சுவையான மெதுவடை எந்த சந்தர்ப்பத்திற்கும் ஏற்றதாகும். பெரும்பாலும் மெதுவடை என்றாலே பாரம்பரியமாக அரைத்த அல்லது ஊறவைத்த பருப்பு வகைகளின் கலவையுடன் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இதை சற்று வித்தியாசமான முறையில், ஆரோக்கியமான வழியில் ரவை பயன்படுத்தி தயார் செய்யலாம்.

அன்றாட உணவில் ரவையைப் பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில் ரவையைக் கொண்டு உப்புமா, தோசை போன்றவற்றையே தயார் செய்கிறோம். ஆனால், இது பெரும்பாலானோர் விரும்புவதில்லை. எனவே தான் ரவையை வைத்து எல்லோரும் விரும்பி உண்ணும் மெதுவடை ரெசிபியைத் தயார் செய்யலாம். இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய விரைவான மற்றும் எளிதான மென்மையான ரெசிபி ஆகும். இதில் ரவை மெதுவடை தயார் செய்யும் முறை மற்றும் ரவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வடை சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா? உளுந்து வடை Vs பருப்பு வடை எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

ரவை மெதுவடை தயார் செய்யும் முறை

தேவையானவை

  • ரவை - 1 கப்
  • தண்ணீர் - 1 கப்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
  • கறிவேப்பிலை - 2 முதல் 3
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு (வறுப்பதற்கு)
  • மிளகுத்தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்

ரவை மெதுவடை செய்யும் முறை

  • முதலில் கடாய் ஒன்றில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் ரவையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அது பொன்னிறமான பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
  • பிறகு ஒரு கடாயில் தண்ணீர், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இது கொதித்த பிறகு, ரவையைச் சேர்க்க வேண்டும். இவை அனைத்து தண்ணீரையும் உறிஞ்சும் வரை கிளற வேண்டும்.
  • இதை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். இது தயாரானதும், சமைத்த ரவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
  • அதன் பிறகு, அதில் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இப்போது இந்த கலவையை ஒரு பெரிய உருண்டை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி, சிறிது தட்டையாக்கி, நடுவில் ஒரு துளை போட வேண்டும்.
  • பிறகு பாத்திரத்தில் சிறிது எண்ணெயை சூடாக்கி, வடைகளை நடுத்தர தீயில் பொன்னிறமாகும் வரை ஆழமாக வறுக்க வேண்டும்.
  • இப்போது அருமையான சுவையில் ரவா மெதுவடை தயாராகி விட்டது. இதை தேங்காய் சட்னி, சூடான சாம்பார் அல்லது கெட்ச் அப் போன்றவற்றுடன் சூடாக சாப்பிடலாம்.
  • இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த பதிவும் உதவலாம்: Horse Gram Vada: சுவையான மொறு மொறு கொள்ளு வடை ரெசிபி! இத வெச்சே வெயிட் குறைக்கலாம்

ரவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ரவையானது கரடுமுரடான அரைத்த முழு கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைக் காணலாம்.

எடையிழப்புக்கு - ரவை உட்கொள்வது உடலுக்கு அபரிமிதமான ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் அளிக்கிறது. மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் செரிமானத்தை எளிதாக்கவும், நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

ஆற்றல் ஆதாரமாக - ரவை சாப்பிடுவதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அதன் வளமான ஆற்றல் மூலமாகும். மேலும், இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், அதிக ஆற்றலை வழங்க உதவுகிறது. மிகவும் முக்கியமாக, தேவையற்ற சோம்பலைத் தவிர்க்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு - ரவை சாப்பிடுவதன் மற்றொரு முக்கிய நன்மைகளில் ஒன்றாக இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அடங்கும். இதில் அதிகளவு செலினியம் இருப்பதால், மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இரத்த சோகையைத் தடுக்க - ரவை இரும்புச்சத்து நிறைந்த ஒரு நல்ல மூலமாகும். இது இரத்த சோகையைத் தடுப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான அளவு இரும்புச்சத்து எடுத்துக் கொள்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலை வழங்கவும் உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Green Gram Vada: காஃபி டீக்கு ஏற்ற பச்சைப்பயறு வடை செய்வது எப்படி?

Image Source: Freepik

Read Next

உலர்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவது பல நன்மைகளை அள்ளித் தரும்.!

Disclaimer