Sweet banana ammini kozhukattai recipe: சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருக்குமே திண்பண்டங்களின் மீதான நாட்டம் என்றுமே குறையாது. ஆனால், நாம் எடுத்துக் கொள்ளும் தின்பண்டங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தருமா? பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது குறித்து யோசித்திருக்கிறீர்களா? ஆம். உண்மையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மட்டுமல்லாமல் திண்பண்டங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் கடைகளில் விற்பனை செய்யப்படும் திண்பண்டங்கள் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே பெரும்பாலும் வீட்டிலேயே தயார் செய்யப்படும் உணவுகள், திண்பண்டங்களையே எடுத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் கொழுக்கட்டை மிகவும் பிடித்தமான ஒன்று. பெரும்பாலும் கொழுக்கட்டையானது அரிசி மாவு வைத்தே தயார் செய்யப்படுகிறது. ஆனால், கொழுக்கட்டையை செவ்வாழையைக் கொண்டும் தயார் செய்யலாம். இது சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தையும் தரக்கூடியதாகும். மேலும், இதை எளிதாக வீட்டிலேயே தயார் செய்யலாம். அதன் படி, இதில் செவ்வாழை அம்மினி கொழுக்கட்டைத் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! வீடே மணக்கும் சுவையில் பால் கொழுக்கட்டையை இப்படி செஞ்சி பாருங்க
செவ்வாழை அம்மினி கொழுக்கட்டை தயார் செய்வது எப்படி?
தேவையானவை
முக்கிய கட்டுரைகள்
- செவ்வாழைப்பழம் - 2
- நாட்டுச்சர்க்கரை - 2 ஸ்பூன்
- பால் - கால் ஸ்பூன்
- ராகி மாவு - 1 கப்
- அரிசி - 2 கப்
- உப்பு - ஒரு சிட்டிகை
தாளிக்க தேவையானவை
- திராட்சை - 10
- முந்திரி - 10
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
செவ்வாழை அம்மினி கொழுக்கட்டை தயார் செய்யும் முறை
- சுவையான செவ்வாழை அம்மினி கொழுக்கட்டையைத் தயார் செய்வதற்கு, முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பழுத்த வாழைப்பழம், உப்பு, பால் மற்றும் நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து மையாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதில் நாட்டுச்சர்க்கரையை அதிகளவு கூட சேர்த்துக் கொள்ளலாம்.
- இந்த அரைத்த கலவையில் அரிசி மாவு மற்றும் ராகி மாவு இரண்டையும் சேர்த்து, நன்றாக கொழுக்கட்டை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளலாம். இதில் தண்ணீர் சேர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அதிகளவு தண்ணீரை பயன்படுத்தி விட்டால், பதம் இல்லாமல் போகலாம்.
- இவ்வாறு, பதமாகவும், நல்ல கெட்டியாகவும் பிசைந்த மாவுகளிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இந்த உருண்டையை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கலாம். பின், வெந்த கொழுக்கட்டைகளை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பின், கடாய் ஒன்றில் நெய் சேர்த்து அது சூடான பிறகு வறுத்த முந்திரி, திராட்சை போன்றவற்றைச் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளலாம். இதில் சர்க்கரையை தூவிக்கொள்ள வேண்டும். சர்க்கரையை தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
- சர்க்கரையை அடுப்பில் வைக்கும் போது கலவையில் தூவக் கூடாது. அவ்வாறு தூவினால், சர்க்கரை கரைந்து விடலாம். இறக்கியவுடன், சூட்டிலேயே சர்க்கரையைச் சேர்த்து கரைய வைத்து நல்ல சுவையைத் தரும். பிறகு இந்தக் கலவையில் ஆறவைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்த்து விடலாம். இவை அனைத்தையும் பிரட்டினால், சுவையான செவ்வாழை இனிப்பு அம்மிணி கொழுக்கட்டை தயாராகி விட்டது.
இது ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகள், பெரியவர்களுக்குக் கொடுக்கலாம். இதை ஒரு முறை ருசித்தால், அவர்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.! பூரண கொழுக்கட்டை இப்படி செய்து அசத்துங்க..
செவ்வாழை அம்மிணி கொழுக்கட்டை நன்மைகள்
செவ்வாழை
- செவ்வாழைப் பழத்தில் வைட்டமின் சி மற்றும் B6 போன்றவை நிறைந்துள்ளது. இது உடலில் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
- இதில் உள்ள பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்க உதவுகிறது. மேலும், இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது.
- சிறு வயதினரும் பாதிக்கப்படும் பார்வைக் குறைபாட்டைத் தடுக்க செவ்வாழை பெரிதும் உதவுகிறது. ஏனெனில், இது பார்வை திறனை மேம்படுத்துகிறது.
ராகி மாவு
- ராகியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும், எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- இதில் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை உடலின் இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து,இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
- ராகியில் கரையக்கூடிய, கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டும் நிறைந்துள்ளது. இவை நார்ச்சத்து நீண்ட காலத்திற்கு முழுமையாக வைத்திருக்க உதவுவதுடன், மலச்சிக்கலை எளிதாக்குகிறது.
- ராகி இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது குறைந்த ஹீமோகுளோபின் அளவு உள்ளவர்களுக்கும், இரத்த சோகை உள்ளவர்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.
இது தவிர, இதில் சேர்க்கப்படும் நாட்டுச்சர்க்கரை, பால், நெய் மற்றும் இன்னும் பிற பொருள்களும் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: அருமையான சுவையில் மணக்க மணக்க கொளுக்கட்டை ரெசிபி! இப்படி செஞ்சி அசத்துங்க
Image Source: Freepik