How to make mutton liver curry: அசைவ உணவை விரும்பாதவர்கள் எவர் தான் உள்ளனர். அதிலும் சிக்கன், மட்டன், மீன் போன்ற பல்வேறு அசைவ உணவுகளில் நாட்டம் கொள்கின்றனர். அவ்வாறு அசைவ பிரியர்களுக்கு சிறந்த விருந்தாக மட்டன் சமையல் அமைதிருக்கிறது. மட்டன் சமையலைப் பொறுத்த வரை தலை, ரத்தம் என கிடா உடலின் அனைத்து பாகங்களையும் கொண்டு உணவு தயார் செய்யப்படுகிறது. அந்த வகையில் மட்டனின் ஈரல் பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும்.
மட்டனின் ஈரல் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்றாகும். இதை இட்லி, சப்பாத்தி, தோசை போன்ற டிபன் ரெசிபிகளுடனும், சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். இதில் ருசியான மட்டன் ஈரல் குழம்பு வீட்டிலேயே தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் அதை தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Yam Fry Recipe: மீன் சுவையை மிஞ்சும் சேனைக்கிழங்கு வறுவல்... எப்படி செய்யணும் தெரியுமா?
மட்டன் லிவர் கிரேவி தயாரிக்கும் முறை
தேவையானவை
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் மற்றும் சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
- கசகசா - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- சிவப்பு மிளகாய் - 2
- தக்காளி கூழ் - 1/2 கப்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - 2
- மட்டன் லிவர் - 400 கிராம்
- மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
மட்டன் ஈரல் குழம்பு தயாரிக்கும் முறை
- முதலில் 400 கிராம் அளவிலான மட்டன் லிவரை எடுத்து, அதை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
- பிறகு மிளகு, காய்ந்த மிளகாய், கசகசா, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை, சோம்பு போன்றவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.
- இவை அனைத்தையும் விரைவாக ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து போதுமான தண்ணீர் சேர்த்து பேஸ்ட் தயார் செய்யலாம்.
- இப்போது மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டி எண்ணெய் சேர்க்க வேண்டும்.
- இந்த எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கலாம்.
- இதை வதக்கிய பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- அதன் பிறகு தக்காளி விழுது சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த தக்காளி விழுது பச்சையாகி, எண்ணெய் மேலே மிதந்ததும், மட்டன் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- இதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கலாம். இப்போது செய்து வைத்த மசாலா விழுதைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Mutton Cutlet Recipe: பக்ரீத் ஸ்பெஷல் சுவையான மற்றும் மொறுமொறுப்பான மட்டன் கட்லெட்!
- மேலும் இதில் கரம் மசாலாவைச் சேர்க்கலாம். பின் இதில் மிளகாய் தூள் சேர்த்து முழு கலவையையும் நன்றாகக் கலந்து குறைந்த தீயில் வைத்து மூடி வைக்க வேண்டும்.
- இதை அரை மணி நேரம் அப்படிய வைத்து, கால்கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்து மூடியை மூடி வைக்கலாம். பிறகு 20 நிமிடங்களுக்குப் பிறகு சரிபார்க்க வேண்டும். இதில் மட்டன் ஈரல் சரியாக வேகவைக்கப்பட்டிருந்தால், அடுப்பை அணைத்து விடலாம்.
- அதன் பிறகு, மேலே கொத்தமல்லி இலைகளைத் தூவி விடலாம். இப்போது சுவையான மட்டன் ஈரல் குழம்பு தயாராகி விட்டது. இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது டிபனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மட்டன் ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மட்டன் ஈரலில் உள்ள பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் புரதங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வகைகளில் நன்மை பயக்கும். மட்டன் ஈரலில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அவ்வப்போது மட்டன் ஈரலைச் சாப்பிடுவதன் மூலம் புதிதாக இரத்தம் ஊறும். இரத்த சோகையில் இருந்து மீள்வதற்கான சிறந்த உணவாக மட்டன் ஈரல் அமைகிறது.
பொதுவாக உடல் பாகங்களுக்கு சரியான ஆக்ஸிஜன் சப்ளை இருப்பின், இரத்த சோகை பிரச்சனையைத் தவிர்க்கலாம். அதாவது உடலுக்குப் போதிய ஆக்ஸிஜன் சப்ளை பெறுவதற்கு இரும்புச்சத்து நிறைந்த மட்டன் கல்லீரலை சாப்பிடுவது அவசியமாகக் கருதப்படுகிறது. எனினும், இதை அளவுக்கு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Suvarotti Benefits: இரத்த சோகை முதல் சிறுநீரக நோய் வரை.. சுவரொட்டியின் நன்மைகள் இங்கே..
Image Source: Freepik