How to Make Milagu Kuzhambu at Home: தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதியில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் என பல உடல்நல குறைபாடுகள் ஏற்படும். குளிர்காலங்களில் நாம் பெரும்பாலும் மிளகு அதிகம் பயன்படுத்துவோம். ஏனென்றால், காலம் காலமாக மிளகு சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இது, சளி, இருமல், தொண்டை வலி என பல பிரச்சினைகளுக்கு அருமருந்து. அந்தவகையில், சளி, இருமலை குணமாக்கும் காரசாரமான மிளகு குழம்பு எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதோ உங்களுக்கான ரெசிபி_
இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க இந்த 5 விஷயத்தை செய்யுங்க!
தேவையான பொருட்கள்:
மசாலா விழுது அரைக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி.
தனியா - 2 மேசைக்கரண்டி.
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி.
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி.
மிளகு - 3 மேசைக்கரண்டி.
பூண்டு - 2 பற்கள்.
கறிவேப்பிலை - சிறிது.
காய்ந்த மிளகாய் - 5.
மிளகு குழம்பு செய்ய
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1 கப் ( 25 )
பூண்டு - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது.
புளி தண்ணீர் - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கல்லுப்பு - 3 தேக்கரண்டி
வெல்லம் - 2 தேக்கரண்டி
இந்த பதிவும் உதவலாம்: எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு முதல்.. புற்றுநோய் எதிர்ப்பு வரை.. வாழை இலை செய்யும் அற்புதங்கள் இங்கே..
மிளகு குழம்பு செய்முறை:
- முதலில், மசாலா விழுது அரைக்க கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் தனியா, கடலை பருப்பு, பச்சரிசி, மிளகு சேர்த்து வறுக்கவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
- பின்பு, நன்கு ஆறவிட்டு முதலில் தூளாக அரைத்து, பின்னர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
மிளகு குழம்பு செய்ய
- தண்ணீரில் ஊறவைத்த புளியை நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, கடுகு, வெந்தயம், சீரகம் சேர்க்கவும்.
- கடுகு பொறிய ஆரம்பித்ததும் பெருங்காய தூள், சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும்.
- அடுப்பை குறைந்த தீயில் வைத்து புளி தண்ணீரை ஊற்றி கலந்து விடவும்.
- அடுத்து மஞ்சள் தூள், கல்லுப்பு சேர்த்து புளி தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும்.
- பிறகு அரைத்த மசாலா, தண்ணீர், வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிட்டு இறக்கினால், அட்டகாசமான மிளகு குழம்பு தயார்.
மிளகு குழம்பு ஆரோக்கிய நன்மைகள்:
செரிமானம்
கருப்பு மிளகு செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டும். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வீக்கம் மற்றும் அஜீரணத்தை குறைக்கிறது.
வளர்சிதை மாற்றம்
மிளகாயின் வெப்பத்தை அளிக்கும் கேப்சைசின் என்ற வேதிப்பொருள், உங்கள் உடல் சற்று அதிக கலோரிகளை எரிக்க உதவும்.
வலி நிவாரணம்
வலி சமிக்ஞைகளைக் குறைக்க கேப்சைசின் நரம்புகளுடன் தொடர்பு கொள்ளலாம். அதனால்தான், சில மேற்பூச்சு வலி கிரீம்கள் அதைக் கொண்டிருக்கின்றன.
ஆக்ஸிஜனேற்றிகள்
மிளகில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலை சேதப்படுத்தாமல் பாதுகாக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: நாள் முழுவதும் சக்தியுடன் இருக்க இந்த காலை உணவை சாப்பிடுங்க!
இருதய ஆரோக்கியம்
மிளகு இரத்த அழுத்தம், கொழுப்பு அளவு மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் இருதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
வைட்டமின் ஏ
கெய்ன் மிளகாயில் புரோவிடமின் ஏ கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. இது உடலை வைட்டமின் ஏ யின் செயலில் உள்ள வடிவமாக மாற்றும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு, பார்வை, இனப்பெருக்கம், வளர்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் எலும்பு உட்பட பல ஆரோக்கிய அம்சங்களுக்கு வைட்டமின் ஏ அவசியம்.
Pic Courtesy: Freepik