How To Make Mutton Cutlet: பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் சுவையான அசைவ உணவுகளை சமைப்பார்கள். இந்த பக்ரீத் பண்டிகையன்று வீட்டில் ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் போன்ற ரெசிபியாக மட்டன் கட்லெட்டை செய்யலாம். இது நல்ல மற்றும் அருமையான சுவையைத் தரக்கூடிய சிறந்த ரெசிபியாகும். வீட்டிலேயே மட்டன் கட்லெட் செய்யும் முறை குறித்து காணலாம். அதே போல, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆட்டிறைச்சியிலும் நிறைந்துள்ளது. இதில் ஆட்டுக் கறி உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் காணலாம்.
மட்டன் கட்லெட் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
முக்கிய கட்டுரைகள்
- மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ
- உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து தோலுரித்தது)
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை - சிறிதளவு
- சோம்பு - 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 2 டீஸ்பூன்
- பச்சை பட்டாணி - 1 கப்
- தக்காளி கெட்சப் - 3 டேபிள் ஸ்பூன்
- முட்டை - 2
- பிரட் தூள் - 2 கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் (பொரிப்பதற்கு) - தேவையான அளவு

இந்த பதிவும் உதவலாம்: Mutton Varuval Recipe: வெங்காயம் தக்காளி தேவையில்லை… சூப்பரான மட்டன் கிரேவி ரெசிபி இங்கே…
மட்டன் கட்லெட் செய்யும் முறை
- முதலில் மட்டன் கொத்துக்கறியை நீரில் நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு, வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்கலாம்.
- அதன் பிறகு, இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ் போன்றவற்றைக் கலந்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
- இதில் கழுவி வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியைச் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறி விடலாம். இதை மூடி வைத்து 10 நிமிடம் வரை வேக விடவும். இது கொத்துக்கறியில் உள்ள ஈரப்பதத்தை முற்றியும் ஆவியாக்கி, நல்ல ப்ரௌன் நிறத்தில் மாறி காணப்படும்.
- அதன் பிறகு இதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- பிறகு இதில் தக்காளி கெட்சப் மற்றும் பட்டாணியைச் சேர்த்து நன்கு கிளறலாம்.
- அதன் பிறகு வேகவைத்து மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி பின்பு இறக்கி விடலாம்.
- பின், இதில் 1/2 கப் பிரட் தூளை சேர்த்து பிசைய வேண்டும். இந்த பிசைந்த கலவையில் சிறிது எடுத்து, அதை உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
- பிறகு இதை உடைத்து வைத்த முட்டையில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்ட வேண்டும்.
- இவ்வாறு தட்டையாக பிரட்டி வைத்த கலவைகளை ஃபிரிட்ஜில் 30 நிமிடம் வரை வைக்க வேண்டும்.
- பின், வாணலி ஒன்றில் தேவையான எண்ணெய் ஊற்றி, அது சூடானதும், கட்லெட் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- அவ்வளவு தான் சூப்பரான மற்றும் சுவையான மட்டன் கட்லெட் தயாரானது.

இந்த பதிவும் உதவலாம்: Oil Free Fried Rice: ஒரு துளி கூட எண்ணெய் தேவையில்லை… அருமையான சிக்கன் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி இதோ…
ஆடு இறைச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Goat Meat)
பொதுவாக ஆடு இறைச்சி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆட்டிறைச்சி
ஆட்டிறைச்சியில் இரும்பு, துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின் பி 12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு அமைப்பு செயல்பாடு, இரத்த சிவப்பணு உற்பத்தி மற்றும் வளர்ச்சிதை மாற்றம் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறைந்த கொழுப்பு
மற்ற இறைச்சி வகைகளுடன் ஒப்பிடுகையில், ஆட்டு இறைச்சியில் குறைவான கொழுப்பு உள்ளது. அதாவது இதில் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. இது உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
எளிதில் செரிமானம் அடைய
மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும்போது ஆட்டிறைச்சி எளிதில் செரிமானம் அடையக்கூடியதாகும். இதில் குறைவான சிக்கலான புரதங்கள் மற்றும் கொழுப்புகள் உள்ளது. இது உடலை உடைத்து உறிஞ்சுவதை எளிதாக்குகிறது.
இரத்த சோகையைத் தடுக்க
ஆட்டிறைச்சி இரும்புச்சத்து நிறைந்த மூலமாகும். இது இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுப்பதற்கும் உதவுகிறது.
இவ்வாறு ஆட்டிறைச்சி உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனவே இந்த பக்ரீத் பண்டிகையில் சுவையான மட்டன் கட்லெட் செய்து உண்பதன் மூலம், ஆட்டிறைச்சியின் நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: CWC Priyanka Special: குக் வித் கோமாளியில் பிரியங்கா செய்து அசத்திய மட்டன் நல்லி நிஹாரி செய்வது எப்படி?
Image Source: Freepik