Ramzan Special Mutton Haleem Recipes In Tamil: ரம்ஜான் வரப்போகிறது. ரம்ஜான் என்றாலே நமது நினைவுக்கு வருவது பிரியாணியும் நோம்பு கஞ்சியும் தான். ஆனால், பிரியாணி மற்றும் நோம்பு கஞ்சியை போலவே மட்டன் ஹலீம் ரெசிபி ரம்ஜான் அன்று ஸ்பெஷல் ஆக செய்யப்படும் ரெசிபிகளில் ஒன்று. ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் ஹலீம் எப்படி செய்வது என பார்க்கலாம். இதோ உங்களுக்கான ரெசிபி.
தேவையான பொருட்கள்
மட்டன் சமைக்க
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பிரியாணி இலை
பட்டை - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 6
வெங்காயம் - 2 நறுக்கியது
மட்டன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பருப்பு கோதுமை ரவை
வேகவைக்க
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
கோதுமை ரவை - 1 கப் (200 மில்லி கப்)
உப்பு - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
முழு மிளகு - 1/2 தேக்கரண்டி
மட்டன் ஹலீம் செய்ய
நெய் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2 நறுக்கியது
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
கொத்தமல்லி இலை
புதினா இலை
உப்பு - சிறிது
அலங்கரிக்க
பொரித்த வெங்காயம்
வறுத்த முந்திரி பருப்பு
எலுமிச்சை துண்டுகள்
மட்டன் ஹலீம் செய்முறை:
- உளுந்தம் பருப்பு கடலை பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- கோதுமை ரவையை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பிரஷர் குக்கர்'ரில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் நேரம் மாறியதும், மட்டன் துண்டுகளை போட்டு கிளறவும்.
- இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு கிளறவும்.
- தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கர்'ரை மூடவும்.
- அடுத்து பிரஷர் குக்கர்'ரில் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, முழு மிள்கு போட்டு வேகவைக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி, வேகவைத்த மட்டன் துண்டுகளை பிய்த்து போடவும்.
- அதை வேகவைத்த தண்ணீர் ஊற்றி கிண்டவும்.
- இதில் உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், தக்காளி சேர்த்து கிளறவும்.
- இதில் தயிர், பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
- கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து கிளறி, மூடி 20 நிமிடம் கொதிக்கவிடவும்.
- வேகவைத்த பருப்பு கலவையை மசித்து ஊற்றவும். இப்போது, உப்பு சரி பார்த்து இறக்கினால் மட்டன் ஹலீம் தயார்.
மட்டன் ஹலீம் நன்மைகள் இங்கே
புரதம் அதிகம்: இறைச்சி மற்றும் பயறு வகைகளின் கலவையானது ஹலீமை ஒரு புரதம் நிறைந்த உணவாக ஆக்குகிறது. இது தசை பழுது மற்றும் வளர்ச்சிக்கு அவசியம்.
நார்ச்சத்து நிறைந்தது: தானியங்கள் மற்றும் பயறு வகைகள் அதிக நார்ச்சத்து உள்ளடக்கத்திற்கு பங்களிக்கின்றன. செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன.
ஆற்றலின் நல்ல ஆதாரம்: ஹலீம் என்பது அதிக கலோரி கொண்ட உணவாகும். இது மெதுவாக ஜீரணமாகும் மற்றும் வேகமாக எரியும் பொருட்களுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.
ஆக்ஸிஜனேற்றிகள்: ஹலீமில் பயன்படுத்தப்படும் உலர் பழங்களில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை செல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
தசை மற்றும் திசுக்களை உருவாக்குதல்: ஹலீமில் உள்ள புரதம் நிறைந்த பயறு வகைகள் தசை மற்றும் திசுக்களை உருவாக்க உதவுகின்றன.
ஆற்றல் நிலைகளை நிரப்புகிறது: ஹலீமின் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் குறைக்கப்பட்ட ஆற்றல் நிலைகளை நிரப்ப உதவுகிறது.
ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த: ஹலீம் ஒரு இதயம் நிறைந்த மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது. இது ஒரு சீரான உணவுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.
Pic Courtesy: Freepik