How to make Mutton Keema Samosa Recipe: மழைக்காலம் துவங்கிவிட்டது. வெயிலில் இருந்து சற்று நிவாரணம் கிடைத்தாலும், சில இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு நாம்மில் பலர் புதிய புதிய ஸ்னாக் ரெசிபிகளை செய்து கொடுப்போம். பெரும்பாலும் நாம் காய்கறிகளை வைத்து தான் ஸ்னாக்ஸ் செய்வோம். எப்போதாவது, மட்டன் வைத்து ஸ்னாக்ஸ் செய்து இருக்கீங்களா?
நாம் பெரும்பாலும் மட்டன் வைத்து கிரேவி, சுக்கா, குழம்பு, பிரியாணி என பல ரெசிபிகளை செய்திருப்போம். ஆனால், இந்த முறை மட்டன் வைத்து ஒரு சூப்பரான சமோசா செய்யலாமா? வாருங்கள், மாட்டான் கீமா சமோசா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Chettinad Pepper Chicken: சண்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மிளகு சிக்கன் செய்முறை!
தேவையான பொருட்கள் :
ஃபில்லிங் செய்ய தேவையான பொருட்கள்
மட்டன் கீமா - 1/2 கிலோ.
எண்ணெய் - 3 ஸ்பூன்.
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது.
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 விதை நீக்கி பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
சீரக தூள் - 1 ஸ்பூன்.
தனியா தூள் - 1 ஸ்பூன்.
உப்பு - 1 ஸ்பூன்.
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
தண்ணீர் - 1/2 கப்.
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து (நறுக்கியது).
சமோசா சீட் செய்ய தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்.
உப்பு - 1/2 ஸ்பூன்.
எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை :
- முதலில், ஃபில்லிங் செய்வதற்கு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இதை தொடர்ந்து, விதை நீக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
- பின்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் மட்டன் கீமாவை சேர்த்து கலந்துவிடவும். அடுத்து கரம் மசாலா தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
இந்த பதிவும் உதவலாம் : Kadapa Cabbage Poriyal: இந்த முறை முட்டைகோஸை இப்படி செய்து கொடுங்க.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
- இதை தொடர்ந்து, நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.
- இப்போது, சமோசா சீட் செய்ய ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு சேர்த்து கலந்து, பின்பு எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
- பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை 10 நிமிடம் பிசைந்து கொள்ளவும்.
- கடைசியாக, மாவின் மீது எண்ணெய் தடவி மூடிவைத்து 30 நிமிடம் ஊறவிடவும். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்பு மெல்லியதாக தேய்த்து கொள்ளவும்.
- அடுத்து தோசைக்கல்லை சூடு செய்து அதில் தேய்த்த மாவை போட்டு 3 வினாடி இரண்டு பக்கமும் வேகவிடவும். பிறகு மாவை சதுரமாக வெட்டி பின்பு பாதியாக வெட்டிக்கொள்ளவும்.
- அடுத்து மாவை முக்கோண வடிவில் செய்து அதில் மட்டன் கீமாவை வைத்து, பின்பு மைதா மாவு பசையை வைத்து தேய்த்து மூடி மெதுவாக அழுத்திவிடவும்.
- பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை குறைந்த தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். எண்ணெய் சிறிது சூடானதும் அதில் தயார் செய்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க மட்டன் சமோசா ரெடி!
இந்த பதிவும் உதவலாம் : Ragi Roti Recipe: ராகி ரொட்டி இனிமேல் இப்படி செய்து பாருங்க…
ஒருவர் எவ்வளவு ஆட்டிறைச்சி சாப்பிடணும்?

சிவப்பு இறைச்சி புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். ஆனால், நீங்கள் அதை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. ஆய்வுகளின் படி, ஆரோக்கியமான வயது வந்த ஒருவர் தினமும் 90 கிராமுக்கு மேல் சிவப்பு இறைச்சியை உட்கொண்டால், அவர் உடனடியாக அதை 70 கிராமாக குறைக்க வேண்டும். இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதை தொடர்ந்து மற்றும் அதிகமாக உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில், நீங்கள் புரதம் மற்றும் பிற வைட்டமின்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சீரான அளவில் இறைச்சியை உட்கொள்ள வேண்டும். நீங்கள் அதிகமாக இறைச்சியை உட்கொண்டால், அது குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. பிரிட்டனில் ஏராளமானோர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Pic Courtesy: Freepik