CWC Priyanka Special: குக் வித் கோமாளியில் பிரியங்கா செய்து அசத்திய மட்டன் நல்லி நிஹாரி செய்வது எப்படி?

  • SHARE
  • FOLLOW
CWC Priyanka Special: குக் வித் கோமாளியில் பிரியங்கா செய்து அசத்திய மட்டன் நல்லி நிஹாரி செய்வது எப்படி?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி. தற்போது, குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நம்மில் பலர் குக் வித் கோமாளியில் பிரபலங்கள் செய்யும் பல ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்ப்போம். அந்தவகையில், இந்த வாரம் தொகுப்பாளினி பிரியங்கா செய்து அசத்திய மட்டன் நல்லி நிஹாரி வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Mutton Varuval Recipe: வெங்காயம் தக்காளி தேவையில்லை… சூப்பரான மட்டன் கிரேவி ரெசிபி இங்கே…

நிஹாரி மெதுவாக சமைக்கப்படும் ஒரு மட்டன் ரெசிபி. நிஹார் என்ற சொல் 'நாள்' என்று பொருள்படும். இது 'நஹர்' என்ற அரபு வார்த்தையிலிருந்து உருவானது. இது காலை பூஜைக்குப் பிறகு அரசர்களுக்குப் பரிமாறப்பட்டது. இது ஒரு பாகிஸ்தான் ரெசிபி ஆகும். இந்த ஈத் அல்-அதாவுக்கு மட்டன் நல்லி நிஹாரி செய்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

மட்டன் நல்லி எலும்பு - 1/4 கிலோ.
இளம் ஆட்டுக்கறி - 1 கப்.
ஜாதிபத்திரி - 1 ஸ்பூன்.
பிரியாணி இலை - 1.
பச்சை ஏலக்காய் - 2.
கிராம்பு - 1 ஸ்பூன்.
கருப்பு ஏலக்காய் - 1.
பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
இஞ்சி விழுது - 1 ஸ்பூன்.
கரம் மசாலா - 1 ஸ்பூன்.
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்.
சிவப்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.
சீரக தூள் - 1 ஸ்பூன்.
வறுத்த வெங்காயம் - 1 ஸ்பூன்.
உப்பு கலந்த தயிர் - 1/2 கப்.
நெய் - 1 ஸ்பூன்.
கடலை மாவு - 1 ஸ்பூன்.
தாழம்பூ எசன்ஸ் (Kewda water) - 1 ஸ்பூன்.

இந்த பதிவும் உதவலாம் : Breakfast Ideas: சட்டுனு செட் தோசை செய்யனுமா.? ரவா இருந்தால் போதும்…

நல்லி நிஹாரி செய்வது எப்படி?

  • முதலில், ஒரு குக்கரில் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சுத்தம் செய்த நல்லி எலும்பு மற்றும் ஆட்டுக்கறியை வேகவைத்து எடுத்து வைக்கவும்.
  • இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிது நெய், எழுத்து வைத்துள்ள கரம் மசாலாக்கள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இவை பச்சை வாசனை போகும் வாய் நன்கு வதக்கவும். பின்னர், சிறிது வறுத்த வெங்காயம் சேர்க்கவும்.
  • பின்னர் அதில், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்க்கவும். மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் வேகவைத்து எடுத்து வைத்துள்ள, ஆட்டுக்கறியை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

இந்த பதிவும் உதவலாம் : Nandu Rasam Recipe: உடம்புக்கு தெம்பை சேர்க்கும் நண்டு ரசம்.. இப்படி செஞ்சி பாருங்க…

  • இதை தொடர்ந்து துருவிய தயிர் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு கடலை மாவை நீரில் கலக்கி சேர்க்கவும். கடைசியாக உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான மட்டன் நல்லி நிஹாரி தயார்.

Pic Courtesy: Freepik

Read Next

Coriander leaves Benefits: கொத்தமல்லி இலையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா!

Disclaimer