Breakfast Ideas: சட்டுனு செட் தோசை செய்யனுமா.? ரவா இருந்தால் போதும்…

  • SHARE
  • FOLLOW
Breakfast Ideas: சட்டுனு செட் தோசை செய்யனுமா.? ரவா இருந்தால் போதும்…

ரவா வைத்து எது வேண்டுமானாலுன் செய்யலாம். அந்த வகையில் இதை வைத்து செட் தோசை செய்யலாம். இதற்கு மாவு அரைத்து ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக மாவை அரைத்து, ஊற வைக்காமல், அப்படியே தோசை ஊற்றி சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்றும், இதன் நன்மைகள் என்னவென்றும் இங்கே காண்போம்.

ரவா செட் தோசை ரெசிபி

தேவையான பொருட்கள்

ரவா - 1 கப்

தயிர் - 1 கப்

ஊற வைத்த அவல் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சுகர் - 1 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: Oil Free Fried Rice: ஒரு துளி கூட எண்ணெய் தேவையில்லை… அருமையான சிக்கன் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி இதோ…

செய்முறை

  • ஒரு மிக்ஸியில் ரவா, தயிர், ஊற வைத்த அவல், உப்பு, சுகர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • இந்த மாவில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
  • தற்போது தோசை கல்லில் எண்ணெய் தடவி, கல் சூடானதும் அதில் ஒரு கரண்டு மாவு எடுத்து ஊற்றவும். இதனை லேசாக திரட்டவும்.
  • தோசையை பிரட்டி போட வேண்டாம். அப்படியே விடவும். தோசை வெந்து வந்ததும், தட்டில் எடுத்து வைக்கவும்.
  • அவ்வளவு தான் சாஃப்ட்டான ரவா செட் தோசை ரெடி. இதற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிடவும். அவ்வளவு சுவையாக இருக்கும்.

ரவா நன்மைகள்

  • ரவா, இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களுடன் தியாமின் மற்றும் ஃபோலேட் போன்ற வைட்டமின்களைக் கொண்ட ஒரு ஊட்டச்சத்து சக்தியாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன மற்றும் உகந்த மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.
  • ரவா என்பது நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இது செரிமானத்திற்கு உதவுகிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் நீண்ட நேரம் உங்களை முழுதாக உணர வைக்கிறது. உங்கள் உணவில் ரவாவை சேர்ப்பது ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது மற்றும் எடை நிர்வாகத்தை ஆதரிக்கிறது.
  • ரவா என்பது கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும். இது விரைவான ஆற்றலை ஊக்கப்படுத்துகிறது. உடனடி ஆற்றல் ஆதாரம் தேவைப்படும் விளையாட்டு வீரர்கள் மற்றும் தனிநபர்களுக்கு இது ஒரு விருப்பமான தேர்வாகும்.
  • ரவாவில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

Read Next

Vitamin D Supplements: அனைவரும் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுக்கலாமா? இதன் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

Disclaimer