multigrain pumpkin dosa recipe in Tamil: பெரும்பலான வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கலாகத்தான் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு வீட்டிலும் தோசை பிரியர்களுக்கு பஞ்சம் இருக்காது. மூன்று வேலை தோசை கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் விரும்பி சாப்பிடும் பலர் உள்ளனர். இவர்களை தோசை பிரியர்கள் என்பதற்கு பதில் தோசை வெறியர்கள் என்று கூறலாம்.
அப்படி நமக்கு பிடித்த தோசையை இன்னும் ஆரோக்கியமாக சாப்பிட்டால் எப்படி இருக்கும். வாருங்கள், ஆரோக்கியம் நிறைந்த மல்டிகிரேன் பூசணி தோசை எப்படி செய்வது, இதன் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Millet Pongal: ஆரோக்கியம் நிறைந்த வரகரிசி பொங்கல்… எப்படி செய்யணும்?
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
மைசூர் பருப்பு - 1 கப்
கம்பு - 1 கப்
உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
இட்லி அரிசி - 1 கப்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1/4 இன்ச்
பரங்கிக்காய் - 1 கப்
மல்டிகிரேன் பூசணி தோசை செய்முறை:

- முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு, மசூர் தால், கருப்பு கொண்டைக்கடலை, அரிசி, உளுந்து என அனைத்தையும் சேர்த்து முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.
- அடுத்த நாள் காலையில் அதை அலசி தனியே எடுத்து வைக்கவும்.
- இப்போது அதில் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பரங்கிக்காய், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
- அரைத்த மாவை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு துவையல் எப்படி செய்வது?
- பின்னர், தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து எடுத்தால் சுவையான மல்டிகிரேன் பூசணி தோசை ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள எந்த சட்னி, சாம்பார், குருமா என வைத்துக்கொள்ளலாம்.
மல்டிக்ரைன் பம்கின் தோசை
நார்ச்சத்து: பூசணி மற்றும் மல்டிகிரைன் இரண்டும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரங்கள், இது குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது, இரத்த சர்க்கரையை சீராக்குகிறது மற்றும் உடலில் இருந்து கொழுப்பை நீக்குகிறது.
வைட்டமின் ஏ: பூசணி வைட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகும், இது கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது மற்றும் மாகுலர் சிதைவின் வளர்ச்சியை மெதுவாக்க உதவும்.
வைட்டமின் சி: பூசணிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Onion Rice Recipe: வெறும் 2 வெங்காயம் இருந்தா போதும்… 10 நிமிஷத்தில் சுவையான ரைஸ் ரெடி!
பொட்டாசியம்: பூசணிக்காயில் பொட்டாசியம் உள்ளது. இது சாதாரண செல் செயல்பாடு, தசை சுருக்கம் மற்றும் சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
புரதம்: மல்டிகிரேன் புரதத்தின் மூலமாக இருக்கலாம்.
இரும்பு: மல்டிகிரேன் இரும்பின் ஆதாரமாக இருக்கலாம்.
மக்னீசியம்: பூசணி விதைகள் மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும். இது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
Pic Courtesy: Freepik