$
Kollu Sadam Recipe in Tamil: கொள்ளு காலம் காலமாக பல உடல்நல பிரச்சினைகளை நீக்க பயனப்டுத்தப்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் பிரச்சினை மற்றும் உடல் எடையை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், கொள்ளு வைத்து ஒரு அருமையான துவையல் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1/2 கப் ( 125 கிராம் )
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 15
பூண்டு - 7 பற்கள்
புளி - சிறிது
துருவிய தேங்காய் - 1/2 மூடி
கல்லுப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
சீரகம் - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிது
இந்த பதிவும் உதவலாம் : Sakkarai Pongal: சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் செய்யலாமா?
கொள்ளு துவையல் செய்முறை:

- ஒரு பானில் கொள்ளு சேர்த்து ,பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.பின்பு நன்கு ஆறவிடவும்.
- அதே பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து வறுக்கவும்.
- அடுத்து காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து கலந்து விடவும்.
- பிறகு துருவிய தேங்காய், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும்.
- ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- பிறகு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து தாளிப்பை துவையலுடன் சேர்த்து கலந்து விட்டால், சுவையான கொள்ளு துவையல் தயார்.
இந்த பதிவும் உதவலாம் : Cauliflower soup: மாஸ் வேகத்தில் வெயிட் லாஸ் செய்யணுமா? சூப்பரான இந்த சூப் ரெசிபி செய்யுங்க
கொள்ளு துவையல் ஆரோக்கிய நண்மைகள்

சிறந்த செரிமானம்
குதிரைவாலியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது, வாயுவைக் குறைக்கிறது மற்றும் அஜீரணத்தைத் தடுக்கிறது.
சரும ஆரோக்கியம்
குதிரைவாலி தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் கோளாறுகளைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவும். இது கொலாஜன் தொகுப்பை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.
விந்தணு ஆரோக்கியம்
குதிரைவாலியில் உள்ள தாதுக்கள் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் மேம்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : Carrot Laddu: கேரட்டை வைத்து சுவையான லட்டு செய்யலாமா? இதோ ரெசிபி!
எடை இழப்பு
குதிரைவாலியில் உள்ள புரதம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும், எடையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் முடியும்.
மற்ற ஆரோக்கிய நன்மைகள்
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, இதய ஆரோக்கியம், இரத்த அழுத்த பராமரிப்பு, சிறுநீரக கல் தடுப்பு, இரத்த சோகை தடுப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆகியவற்றிற்கும் குதிரைவாலி உதவுகிறது.
Pic Courtesy: Freepik