அனிமியாவை அடித்து விரட்டும் அருமையான பீட்ரூட் ரெசிபி!

  • SHARE
  • FOLLOW
அனிமியாவை அடித்து விரட்டும் அருமையான பீட்ரூட் ரெசிபி!

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டின் முக்கிய நன்மையாக விளங்குவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகும். இது தவிர இரத்த அழுத்தத்தை முறைப்படுத்துவது, செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க, வீக்கத்தைக் குறைக்க, உடலின் ஆற்றலை அதிகரிக்க உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பீட்ரூட்டின் மொறுமொறுப்பான தன்மை, சிவப்பு வண்ணம் அனைத்துமே அதை பல்வேறு உணவுகளாக அனுபவிக்க உதவுகிறது. இதில் பீட்ரூட் வைத்து தயார் செய்யப்படும் பீட்ரூட் சட்னி ரெசிபி குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Laddu Recipe: பீட்ரூட்டை வைத்து ஆரோக்கியமாக லட்டு செய்யலாம்.. ரெசிபி இங்கே..

பீட்ரூட் சட்னி ரெசிபி செய்வது எப்படி?

தேவையானவை

  • பீட்ரூட் - 1
  • புதினா - ஒரு கைப்பிடியளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • சீரகம் - கால் ஸ்பூன்
  • எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • உப்பு - தேவையான அளவு

தாளிக்கத் தேவையான பொருள்கள்

  • எண்ணெய் - 1 ஸ்பூன்
  • உளுந்து - கால் ஸ்பூன்
  • கடுகு - கால் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Kola Urundai: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ருட் கோலா உருண்டை செய்முறை!

பீட்ரூட் சட்னி தயாரிக்கும் முறை

  • இந்த ரெசிபி தயார் செய்ய, முதலில் பீட்ரூட்டை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின் பீட்ரூட், புதினா, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு போன்றவற்றைச் சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
  • பிறகு இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு, கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து, அது சூடான பிறகு அதில் கடுகு, உளுந்து சேர்க்க வேண்டும்.
  • இது பொன்னிறமாக மாறும் வரை பொரிய வைத்து, பிறகு அந்த தாளிப்பை சட்னியில் சேர்க்க வேண்டும்.
  • இப்போது சூப்பரான மற்றும் அருமையான சுவையில் பீட்ரூட் சட்னி ரெசிபி தயாராகி விட்டது.

பீட்ரூட்டை அப்படியே சாப்பிட தயங்குபவர்களுக்கு இது போன்று சட்னி ரெசிபியாக தரும் போது அவர்கள் விரும்பி சாப்பிடுவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இந்த சட்னி ரெசிபி இருக்கும்.

பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பீட்ரூட் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

  • பீட்ரூட்டில் அதிகளவு வைட்டமின் பி1 மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை அனிமியா போன்ற இரத்த சோகை பிரச்சனையைத் தவிர்க்க உதவுகிறது.
  • பீட்ரூட் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்க உதவுகிறது. இது கல்லீரல், பித்தப்பை மற்றும் சிறுநீரகம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இவை உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும், உடலுறுப்புகளைச் சுத்தமடையச் செய்யவும் உதவுகிறது.
  • பீட்ரூட்டில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, பெருங்குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • பீட்ரூட்டில் பீட்டாலைன் என்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. இவை நாள்பட்ட அழற்சி தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இது சிறுநீரகத்தில் ஏற்படும் அழற்சியைப் போக்கவும், சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Paratha Benefits: குழந்தைகள் விரும்பி உண்ணும் பீட்ரூட் பரோட்டா செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகள்

Image Source: Freepik

Read Next

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தேன் நெல்லிக்காய்! எப்படி சாப்பிடுவது?

Disclaimer