Coconut therattipal recipe in tamil: அன்றாட உணவில் பல்வேறு ஆரோக்கியமான உணவுகள், பானங்கள், விதைகள், மூலிகைகள் உள்ளிட்டவற்றைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வாறே, இந்திய சமையலறையில் முக்கிய பொருளாக விளங்கும் தேங்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. கார உணவுகள், இனிப்பு உணவுகள் என பல்வேறு வகையான உணவு தயாரிப்பில் தேங்காயைப் பயன்படுத்தலாம். இதில் இனிப்பு உணவாக தேங்காயைக் கொண்டு தேங்காய் திரட்டிப்பாலைத் தயார் செய்யலாம்.
இந்த ரெசிபி திருநெல்வேலி ஸ்பெஷல் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த தேங்காய் திரட்டிப்பாலை எளிமையான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம். இந்த ஸ்வீட்டை வாயில் வைத்தால் அப்படியே கரைந்து விடும். இது ஒரு பாரம்பரியமான இனிப்பு வகையாகும். இதில் தேங்காயை வைத்துத் தயார் செய்யப்படும் தேங்காய் திரட்டிப் பால் தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் அதை செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Walnut Halwa: ஒரு கப் வால்நட்ஸ் இருந்தால் போதும்… ஆரோக்கியமான வால்நட்ஸ் அல்வா செய்யலாம்!
தேங்கய் திரட்டிப்பால் செய்யும் முறை
தேவையான பொருள்கள்
- தேங்காய் துருவல் - 1 கப்
- அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- பாசிப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
- வெல்லம் - 1 கப்
- திராட்சை - 20
- முந்திரி பருப்பு - 20
- நெய் - 6 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள் - 1ஸ்பூன்
- உப்பு - ஒரு சிட்டிகை
தேங்காய் திரட்டிப்பால் செய்முறை
- இந்த ரெசிபியைத் தயார் செய்ய முதலில் ஒரு கப் தேங்காயை துருவி எடுத்து கொள்ள வேண்டும்.
- பின், கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதை சூடாக்கி, அதில் 2 ஸ்பூன் பாசிப்பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
- அடுப்பைக் குறைவான தீயில் வைத்து பாசிப்பருப்பை நன்கு வறுக்க வேண்டும்.
- பிறகு, இவ்வாறு வறுத்த பருப்பை ஆற வைக்க வேண்டும். பின் மிக்ஸி ஜாரில் பாசி பருப்பை சேர்த்து அரைக்க வேண்டும்.
- அதன் பின்னர், அதில் துருவிய ஒரு கப் தேங்காயை சேர்த்து முதலில் அரைக்க வேண்டும். பிறகு இதில் அரை கப் அளவிலான தண்ணீர் சேர்த்து தேங்காயை நன்கு அரைக்கலாம்.
- பின்னர், தனியாக வெல்லத்தை அரைகப் தண்ணீர் பாகு கரைசலாக காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பாகுபதம் பார்க்கத் தேவையில்லை.
இந்த பதிவும் உதவலாம்: Aval Kesari: ரவை கேசரி.. சேமியா கேசரி தெரியும்.. அவல் கேசரி தெரியுமா? இதோ ரெசிபி!
- இப்போது கடாய் ஒன்றில் 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். இதில் முதலில் முந்திரி பருப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து, அதன் நிறம் மாற ஆரம்பிக்கும் போது அதில் திராட்சையையும் சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளலாம்.
- இப்போது அதே நெய்யில் அரைத்து வைத்த பாசிப்பருப்பு, தேங்காய் கலவையைச் சேர்த்து கிளறலாம். இது நன்கு வேக ஆரம்பிக்கும் போது அதில் வெல்ல பாகு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இதில் அடுப்பைக் குறைவான தீயில் வைத்து கலந்து விடலாம்.
- இந்தக் கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து விடலாம். திரட்டிப்பாலைக் கைவிடாமல் கலந்து விட வேண்டும். இல்லையெனில், இது கட்டியாகி விடலாம். இப்போது இதில் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கலக்கலாம்.
கடைசியாக திரட்டிப்பால் பாத்திரத்தில் ஒட்டி வரும் போது அதில் கொஞ்சம் கொஞ்சமாக 2 ஸ்பூன் வரை நெய் விட்டு நன்றாக கிளறி விடலாம். விருப்பமிருந்தால், மேலும் சிறிது நெய் சேர்த்து கிளறலாம்.
இதில் திரட்டிபால் ரெடியான பிறகு நெய் மேலாக திரண்டு வர ஆரம்பிக்கும். அதே நேரத்தில் ஏற்கனவே நாம் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம்.
இப்போது சுவையான தேங்காய் திரட்டி பால் ரெடி தயாராகிவிட்டது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.
தேங்காய் சாப்பிடுவதன் நன்மைகள்
அன்றாட உணவில் தேங்காயைச் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் தேங்காய் சாப்பிடுவதால் நன்மைகளைக் காணலாம்.
- தேங்காயில் அதிகளவு பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளது. எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்தைப் போலவே பாஸ்பரஸ் சத்துக்களும் அவசியமாகும். தேங்காயை அடிக்கடி சாப்பிடுவது எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
- தேங்காயில் உள்ள இரும்பு சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களாகும்.
- தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியைத் தருகிறது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
- இதில் உள்ள அதிகளவிலான புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் முடி உதிர்வைத் தடுக்கவும், தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: கடலை பர்பி சாப்பிட்டிருபீங்கா பிரட் பர்பி சாப்பிட்டிருக்கீங்களா? இதோ ரெசிபி!