Aval Kesari Recipe In Tamil: அவல் ஆரோக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்று. இதை வைத்து, தோசை, லட்டு, புட்டு, போஹா என பல ரெசிபிக்களை செய்திருப்போம். ஆனால், காலம் காலமாக ரவை அல்லது சேமியாவை வைத்து செய்யக்கூடிய கேசரியை அவளை வைத்து செய்தால் எப்படி இருக்கும் என எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா? வாருங்கள், இந்த முறை அவலை வைத்து சுவையான அவல் கேசரி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அவல் - 1 1/2 கப்
நெய் - 4 ஸ்பூன்
முந்திரி - 10
திராட்சை - 6
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
காய்ச்சிய பால் - 1 கப் ஆறியது
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 4 துண்டுகள் பிரட் போதும்... 10 நிமிடத்தில் சுவையான பிரட் அல்வா தயார்!
அவல் கேசரி செய்முறை:
- ஒரு கடாயில் அவலை போட்டு லேசாக வறுக்கவும்.
- அடுத்து தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
- அவலை சிறிதளவு தண்ணீர் ஊற்றி அலசி வைக்கவும்.
- ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்த பின் அதில் கலர் பவுடர் மற்றும் அவல் சேர்த்து வேக வைக்கவும்.
- அவல் சிறிதளவு வெந்தபின் பால் ஊற்றி மேலும் வேக வைக்கவும்.
- 5 நிமிடங்களுக்கு கடாயை மூடி மிதமான தீயில் வேக வைக்கவும்.
- அவல் முழுமையாக வெந்தபின் இதில் சர்க்கரை ஏலக்காய்த்தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.
- இறுதியாக வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளரினால் அவல் கேசரி தயார்.
அவல் ஆரோக்கிய நன்மைகள்
எடை இழப்பு
போஹாவில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உங்களை முழுதாக உணரவும் உங்கள் கலோரி உட்கொள்ளலை குறைக்கவும் உதவும்.
செரிமானம்
போஹா ஜீரணிக்க எளிதானது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும், வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Suraikaai Payasam: பால் பாயாசம் சாப்பிட்டிருப்பீங்க... எப்போதாவது சுரைக்காய் பாயாசம் சாப்பிட்டிருக்கீர்களா?
இதய ஆரோக்கியம்
போஹா கொலஸ்ட்ரால் இல்லாதது மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
இரத்த அழுத்தம்
போஹாவில் சோடியம் குறைவாக உள்ளது மற்றும் சாதாரண இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவும்.
ஆற்றல்
போஹா கார்போஹைட்ரேட்டின் நல்ல மூலமாகும். இது விரைவான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கும்.
குடல் ஆரோக்கியம்
போஹா என்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு புரோபயாடிக் ஆகும்.
ஊட்டச்சத்துக்கள்
இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போஹாவில் நிறைந்துள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Walnut Halwa: ஒரு கப் வால்நட்ஸ் இருந்தால் போதும்… ஆரோக்கியமான வால்நட்ஸ் அல்வா செய்யலாம்!
பசையம் இல்லாதது
போஹா இயற்கையாகவே பசையம் இல்லாதது. இது பசையம் சகிப்புத்தன்மை அல்லது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான விருப்பமாக அமைகிறது.
Pic Courtesy: Freepik