$
How to make Aval Ladoo in Tamil: தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும், நொறுக்கு தீனியும், இனிப்புகளும் தான். தீபாவளி வர ஒரு வாரம் இருக்கும் போதே நமது வீடுகளில் பலகாரங்கள் செய்ய துவங்கி விடுவார்கள். அதிரசம், லட்டு, குளோப் ஜாமும், வடை, அப்பம், முறுக்கு, ஜாங்கிரி என இனிப்புக்கு பஞ்சமே இல்லாமல் அடுக்கி வைப்பார்கள்.
நமக்கு பிடித்த இனிப்புகளை ஆரோக்கியமாக சாப்பிட்டால் எப்படி இருக்கும் என எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா? அப்படி நீங்கள் ஏதாவது புதிதாக செய்ய முயற்சி செய்தால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். இந்த முறை அவலை வைத்து சுவையான அவல் லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி கார அப்பம் எப்படி செய்யணும் தெரியுமா?
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1/4 கப்
பொட்டு கடலை - 1/4 கப்
அவல் - 1 கப் (250 மி.லி கப்)
நெய்
முந்திரி
திராட்சை
தண்ணீர் - 3/4 கப்
வெல்லம் - 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
அவல் லட்டு செய்முறை:

- முதலில் கடாயில் நிலக்கடலையை போட்டு இரண்டு நிமிடம் வறுத்து, பொட்டு கடலை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
- இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு தட்டில் எடுத்து போடவும்.
- பிறகு அதே கடாயில் சிறிது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
- வெல்ல பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.
- வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Besan Laddu: ஒரு கப் கடலை மாவு இருந்தால் போதும் சுவையான லட்டு செய்யலாம்!
- பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்ல பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- கலவையை நன்கு கலந்து, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
- பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும்.
- கலவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடித்தால் அவல் லட்டு தயார்.
அவல் லட்டு ஆரோக்கிய நன்மைகள்

எடை இழப்பு
போஹாவில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உங்களை முழுதாக உணரவும் உங்கள் கலோரி உட்கொள்ளலை குறைக்கவும் உதவும்.
செரிமானம்
போஹா ஜீரணிக்க எளிதானது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும், வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.
இதய ஆரோக்கியம்
போஹா கொலஸ்ட்ரால் இல்லாதது மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
இரத்த அழுத்தம்
போஹாவில் சோடியம் குறைவாக உள்ளது மற்றும் சாதாரண இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : Javvarisi Bonda: ஜவ்வரிசியில் போண்டா செய்ததுண்டா? இதோ ரெசிபி!
ஆற்றல்
போஹா கார்போஹைட்ரேட்டின் நல்ல மூலமாகும். இது விரைவான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கும்.
குடல் ஆரோக்கியம்
போஹா என்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு புரோபயாடிக் ஆகும்.
ஊட்டச்சத்துக்கள்
இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போஹாவில் நிறைந்துள்ளது.
பசையம் இல்லாதது
போஹா இயற்கையாகவே பசையம் இல்லாதது. இது பசையம் சகிப்புத்தன்மை அல்லது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான விருப்பமாக அமைகிறது.
Pic Courtesy: Freepik