How To make Arisi Thattai Recipe: தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும், நொறுக்கு தீனியும், இனிப்புகளும் தான். தீபாவளி வர ஒரு வாரம் இருக்கும் போதே நமது வீடுகளில் பலகாரங்கள் செய்ய துவங்கி விடுவார்கள். அதிரசம், லட்டு, குளோப் ஜாமும், வடை, அப்பம், முறுக்கு, ஜாங்கிரி என இனிப்புக்கு பஞ்சமே இல்லாமல் அடுக்கி வைப்பார்கள்.
நமக்கு பிடித்த இனிப்புகளை ஆரோக்கியமாக சாப்பிட்டால் எப்படி இருக்கும் என எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா? அப்படி நீங்கள் ஏதாவது புதிதாக செய்ய முயற்சி செய்தால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். இந்த முறை 2 கப் அரிசி மாவை வைத்து அரிசி தட்டை செய்யலாமா? இதோ உங்களுக்கான செய்முறை.
இந்த பதிவும் உதவலாம் : Javvarisi Bonda: ஜவ்வரிசியில் போண்டா செய்ததுண்டா? இதோ ரெசிபி!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பில்லாத வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
அரிசி தட்டை செய்முறை:
- மசாலா அரைக்க கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து தனியாக வைக்கவும்.
- இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும்.
- 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த கடலை பருப்பு சேர்க்கவும். அத்துடன் அரைத்த மசாலா விழுதையும் சேர்க்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Aval Ladoo: ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு… எப்படி செய்யணும் தெரியுமா?
- அடுத்து உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரகம், எள், பெருங்காய தூள் மற்றும் உப்பில்லாத வெண்ணெய் சேர்க்கவும்.
- இவை அனைத்தையும் நன்கு கலக்கவும்.
- அடுத்து சூடான கொதிக்கும் நீரை படிப்படியாக ஊற்றி மாவை தயார் செய்யவும். சுமார் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- அகன்ற கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.
- ஒரு வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, மாவை சிறிய உருண்டையாக உருட்டி வைக்கவும். தண்ணீரில் கையை ஈரப்படுத்தி மெதுவாக அதை சமமாக அழுத்தவும்.
- சூடான எண்ணெயில் சேர்த்து எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Diwali Special Recipe: தீபாவளிக்கு தித்திக்கும் பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் செய்யலாமா?
- கடாயில் இருந்து எடுத்து ஆறவைக்கவும்.
- அவை அனைத்தும் முழுவதுமாக குளிர்ந்தவுடன், காற்று புகாத டப்பாவில் 4-5 நாட்களுக்கு வைத்து பரிமாறவும்.
Pic Courtesy: Freepik