How to make Ribbon Pakoda at Home: தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும், நொறுக்கு தீனியும், இனிப்புகளும் தான். தீபாவளி வர ஒரு வாரம் இருக்கும் போதே நமது வீடுகளில் பலகாரங்கள் செய்ய துவங்கி விடுவார்கள். அதிரசம், லட்டு, குளோப் ஜாமும், வடை, அப்பம், முறுக்கு, ஜாங்கிரி என இனிப்புக்கு பஞ்சமே இல்லாமல் அடுக்கி வைப்பார்கள்.
நமக்கு பிடித்த இனிப்புகளை ஆரோக்கியமாக சாப்பிட்டால் எப்படி இருக்கும் என எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா? அப்படி நீங்கள் ஏதாவது புதிதாக செய்ய முயற்சி செய்தால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். இந்த முறை 2 கப் அரிசி மாவை வைத்து சுவையான ரிப்பன் பக்கோடா செய்யலாமா? இதோ உங்களுக்கான செய்முறை.
இந்த பதிவும் உதவலாம் : Diwali Special Recipe: தீபாவளிக்கு தித்திக்கும் பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் செய்யலாமா?
தேவையான பொருட்கள்:
பொட்டு கடலை - 1/2 கப்
அரிசி மாவு - 1 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
ரிப்பன் பக்கோடா செய்முறை:
- மிக்ஸி ஜாரில் பொட்டு கடலையை சேர்த்து நன்கு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்பு சல்லடையில் அரைத்த பொட்டு கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து சலித்து கொள்ளவும்.
- பிறகு உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
- பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பிறகு முறுக்கு அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சை வைக்கவும். பின்பு முறுக்கு அச்சின் உள் பக்கம் எண்ணெய் தடவவும்.
இந்த பதிவும் உதவலாம் : Arisi Thattai Recipe: கொஞ்சம் அரிசி மாவு இருந்தா போதும் அரிசி தட்டை தயார்!!
- பிறகு தயார் செய்த மாவை அச்சில் சேர்க்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அச்சில் இருந்து மாவை எண்ணெயில் பிழிந்துவிடவும்.
- பிறகு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து ஆறவிட்டால் சுவையான ரிப்பன் பக்கோடா தயார்!
ரிப்பன் பக்கோடா ஆரோக்கிய நன்மைகள்
நார்ச்சத்து: பகோராக்கள் காய்கறிகள் மற்றும் கொண்டைக்கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவை நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரங்கள். நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் உங்களை முழுதாக உணர வைக்கும்.
வைட்டமின்கள்: பகோராவில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் நியாசின் உள்ளன.
தாதுக்கள்: பகோராவில் துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் உள்ளன.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: பகோராக்களில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளன. அவை புற்றுநோய் மற்றும் தொற்றுநோயைத் தடுக்க உதவும் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன.
Pic Courtesy: Freepik