How To Make Muttaikose Pakoda Recipe: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரோட்டுக்கடை உணவுகள் என்றாலே ரொம்ப பிடிக்கும். அதுவும் பஜ்ஜி, போண்டா, மெதுவடை, பானி பூரி, பேல் பூரி என அனைத்திற்கும் நம்மில் பலர் அடிமை. நாம் என்னதான் வீட்டில் சில விஷயங்களை சமைத்தாலும், அவை கடையில் வாங்கு சுவைக்கு வருவதில்லை என நம்மில் பலர் யோசித்திருப்போம்.
அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் வெங்காய பக்கோடாவை நாம் பலமுறை வீட்டில் முயற்சி செய்திருப்போம். ஆனால், வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸை பயன்படுத்தி எப்போதாவது பக்கோடா செய்ய முயற்சி செய்தது உண்டா? வாருங்கள் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Bread Pakoda: ரோட்டுக்கடை ஸ்டைல் பிரட் பக்கோடா எப்படி செய்யணும் தெரியுமா?
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 250 கிராம்
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
சோள மாவு - 1 மேசைக்கரண்டி
கடலை மாவு - 1 1/2 கப்
முந்திரி பருப்பு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
முட்டைக்கோஸ் பக்கோடா செய்முறை:
- முட்டை கோஸை நீள வாக்கில் மெல்லிசாக நறுக்கி கொள்ளவும்.
- இதனுடன் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு சேர்த்து கொஞ்சம் கொஞ்சம் ஆஹ் தண்ணி தெளிச்சு மசாலா எல்லாம் காய் மேல ஒற்ற மாதிரி கலந்து விடுங்க.
- ஒரு கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் முந்திரி பருப்பை சேர்த்து நல்லா பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கோங்க.
- இப்ப கோஸ் கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து சூடான எண்ணெயில் மெதுவா கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து விடுங்க. ஒரே இடத்தில் மொத்தமா போடாம ஸ்பிரட் பண்ணி போடுங்க, எல்லாப்பக்கமும் பொன்னிறமா வறுபட்டதும் எடுத்து வச்சிடலாம்.
- அடுத்து அடுப்பை அணைத்து விட்டு, இருக்கிற சூட்டிலேயே நீளவாக்கில் கீறி வச்சிருக்கிற பச்சை மிளகாயும் பொரிச்சி எடுத்துக்கலாம். வறுபட்டதும் பொரிச்சி வச்சிருக்கிற கோஸ் கூட சேத்துடலாம். இதே, மாதிரி கொஞ்சம் கருவேப்பிலையும் பொரித்து எடுத்து சேர்த்துக்கலாம்.
- பொரிச்சி வச்ச, முந்திரி பருப்பு, கோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாத்தையும் ஒரு பெரிய பாத்திரத்துல போட்டு நல்லா கலந்து விட்டால் முட்டைக்கோஸ் பக்கோடா தயார்.
முட்டைக்கோஸ் ஆரோக்கிய நன்மைகள்:
- வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலேட், இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் முட்டைக்கோஸில் காணப்படுகின்றன.
- முட்டைக்கோஸ் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
- முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
- முட்டைக்கோஸில் உள்ள நார்ச்சத்து செரிமான சக்தியை பலப்படுத்துகிறது.
- முட்டைக்கோஸில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
- முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே இரத்த உறைதலுக்கு உதவுகிறது.
- முட்டைக்கோஸில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் பிற வைட்டமின்கள் பார்வையை மேம்படுத்த உதவுகின்றன.
- முட்டைக்கோஸில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்திற்கு நன்மை பயக்கும்.
- முட்டைக்கோஸில் உள்ள குறைந்த கலோரிகள் எடை இழப்புக்கு உதவுகின்றன.
Pic Courtesy: Freepik