Chicken Bread Rolls Recipe in Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரோட்டுக்கடை உணவுகள் என்றாலே ரொம்ப பிடிக்கும். அதுவும் பஜ்ஜி, போண்டா, மெதுவடை, பானி பூரி, பேல் பூரி என அனைத்திற்கும் நம்மில் பலர் அடிமை. நாம் என்னதான் வீட்டில் சில விஷயங்களை சமைத்தாலும், அவை கடையில் வாங்கு சுவைக்கு வருவதில்லை என நம்மில் பலர் யோசித்திருப்போம்.
அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் பிரட் ரோல் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது மாலை நேர டீயுடனான தீனிக்கு மிகவும் ஏற்றது. வாருங்கள் சிக்கன் பிரட் ரோல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Jackfruit seed curry: கறிக்குழம்பை மிஞ்சும் சுவையில் அசத்தலான பலாப்பழ கொட்டை கறி ரெசிபி! உங்க உடம்புக்கும் ரொம்ப நல்லது
தேவையான பொருட்கள்:
சிக்கன் பில்லிங் செய்ய
சிக்கன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - சிறிது
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
குடைமிளகாய் பொடியாக நறுக்கியது
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் - சிறிது
கொத்தமல்லி இலை நறுக்கியது
சிக்கன் பிரட் ரோல் செய்ய
பிரட் - 4
முட்டை - 2
பிரட் தூள் - அரைக்கப்
சிக்கன் பில்லிங்
எண்ணெய் - பொரிப்பதற்கு
இந்த பதிவும் உதவலாம்: Rava Uttapam: ஒரு கப் ரவா இருந்தால் போதும் சூப்பரான ரவா ஊத்தப்பம் ரெடி!
சிக்கன் பிரட் ரோல் செய்முறை:
- குக்கரில் சிக்கன், மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், தண்ணீர் ஊற்றி கலந்து 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
- பின்பு சிக்கனை தனியாக எடுத்து நன்கு ஆறவிட்டு, சிக்கனின் எலும்புகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக பிய்த்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் , சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
- பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் கலந்துவிடவும்.
- பிறகு சிக்கன் வேகைத்த தண்ணீரை சேர்த்து வேகவிடவும்.
- பின்பு நறுக்கிய வெங்காயத்தாள், வெங்காயத்தாள் வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
- பிரட்டின் எல்ல பக்க முனைகளையும் வெட்டி பின்பு பிரட் துண்டை தண்ணீரில் நனைத்து பிறகு மீதம் உள்ள தண்ணீரினை மெதுவாக அழுத்தி பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- பின்பு பிரட் துண்டில் தயார் செய்த சிக்கன் பில்லிங்கை வைத்து மூடவும்.
- பிறகு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.
- பிறகு பிரட்டை முட்டையில் தேய்த்து பிரட் தூளில் பிரட்டி வைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், அதில் தயார் செய்த சிக்கன் பிரட் ரோலை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சிக்கன் பிரட் ரோல் தயார்!
Pic Courtesy: Freepik