Asari Chicken Fry: சிக்கன் வாங்கினா ஆசாரி சிக்கன் வறுவல் ட்ரை பண்ணுங்க!!

எப்பவும் ஒரே மாதரி சிக்கன் வறுவல் செய்து போர் அடிக்குதா? அப்போ இந்த முறை இப்படி செய்து பாருங்க. சுவை வேற லெவலில் இருக்கும்.
  • SHARE
  • FOLLOW
Asari Chicken Fry: சிக்கன் வாங்கினா ஆசாரி சிக்கன் வறுவல் ட்ரை பண்ணுங்க!!

Asari Chicken Fry Recipe in Tamil: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது உண்மை. ஏனென்றால், ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது. நீங்கள் அறியாமல் செய்யும் உணவு தொடர்பான தவறால், பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

எனவே, ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம். எப்பவும் ஒரே மாதரி சிக்கன் வறுவல் செய்து போர் அடிக்குதா? அப்போ இந்த முறை இப்படி செய்து பாருங்க. சுவை வேற லெவலில் இருக்கும். வாருங்கள் சுவையான ஆசாரி சிக்கன் வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Green Gram Paniyaram: ஒரு கப் பச்சை பாசிப்பயறு இருந்தால் போதும் சுவையான பணியாரம் தயார்!

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
சின்ன வெங்காயம் - 400 கிராம் நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கல்லுப்பு - 2 தேக்கரண்டி
சிக்கன் - 1 கிலோ
கறிவேப்பிலை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி

ஆசாரி சிக்கன் செய்முறை:

Chicken Varuval (no prefrying of chicken required) | The Sudden Cook

  • ஒரு அகல கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.
  • கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  • அடுத்து மஞ்சள் தூள், கல்லுப்பு சேர்த்து மிதமான தீயில் கலந்து விடவும்.
  • பின்பு சிக்கனை சேர்த்து கலந்து விட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • கடாயை மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
  • அடுத்து மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தண்ணீர் நன்கு வற்றும் வற்றும் வரை கலந்து விடவும். சுவையான ஆசாரி சிக்கன் தயார்!.

சிக்கன் வறுவல் நன்மைகள்:

எலும்பு ஆரோக்கியம்: கோழியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இது வலுவான எலும்புகளை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: கோழியில் துத்தநாகம் மற்றும் செலினியம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: கோழியில் வைட்டமின்கள் B5 மற்றும் B6 உள்ளன. இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கலாம்.

தசைகளை உருவாக்க உதவுகிறது: கோழி புரதத்தின் நல்ல மூலமாகும். இது தசையை உருவாக்க உதவுகிறது.

தோல் பிரச்சினைகளை நீக்குகிறது: கோழி கல்லீரலில் வைட்டமின் B2 உள்ளது. இது சேதமடைந்த சருமத்தை சரிசெய்யவும், தோல் பிரச்சினைகளைக் குறைக்கவும் உதவும்.

ஆற்றல் ஊக்கி: கோழியில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது ஆற்றலை வழங்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Rice Payasam Recipe: ஒரு கப் பச்சரிசி இருந்தால் போதும் அட்டகாசமான பாயாசம் செய்யலாம்!

கோழியில் உள்ள புரதம்: கோழி புரதம் உயர்தரமானது. ஏனெனில், இது புரதத்தின் கட்டுமானத் தொகுதிகளான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. கோழி கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும்.

Pic Courtesy: Freepik

Read Next

Chicken Kuzhambu: சிக்கன் எடுத்தா இந்த முறை இப்படி செஞ்சு பாருங்க... சுவை அள்ளும்!

Disclaimer