Guntur Chicken Masala Recipe In Tamil: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது உண்மை. ஏனென்றால், ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது. நீங்கள் அறியாமல் செய்யும் உணவு தொடர்பான தவறால், பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
எனவே, ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம். எப்பவும் ஒரே மாதரி சிக்கன் செய்து போர் அடிக்குதா? அப்போ இந்த முறை இப்படி செய்து பாருங்க. சுவை வேற லெவலில் இருக்கும். வாருங்கள் சுவையான குண்டூர் சிக்கன் மசாலா செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Nombu Kanji Recipe: பள்ளிவாசல் ஸ்டைல் நோன்பு கஞ்சி எப்படி செய்யணும் தெரியுமா?
தேவையான பொருட்கள்:
மசாலா தூள் & விழுது செய்ய
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பூண்டு - 4 பற்கள்
குண்டூர் சிக்கன் மசாலா செய்ய
சிக்கன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
அரைத்த மசாலா விழுது
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
தக்காளி - 2 நறுக்கியது
அரைத்த மசாலா தூள்
கறிவேப்பிலை
தண்ணீர் - 1/2 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
இந்த பதிவும் உதவலாம்: மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வாழைக்காய் மசாலா சாதம்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது
குண்டூர் சிக்கன் மசாலா செய்முறை:
ஒரு கடாயில் தனியா, மிளகு, சீரகம் மற்றும் 5 சிவப்பு மிளகாய் சேர்த்து குறைந்த வெப்பத்தில் 3-4 நிமிடங்கள் நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
அவற்றை ஆற விடவும். பின்னர் நன்றாக பொடியாக அரைக்கவும்.
இந்த பொடியில் 2 தேக்கரண்டி ஒதுக்கி வைக்கவும்.
மீதமுள்ள 1½ தேக்கரண்டியுடன் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்க்கவும். சிறிது தண்ணீருடன் விழுதாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்து மஞ்சள் தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலா விழுது ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
ஊறவைத்த சிக்கனை சேர்த்து, கிளறி, சில நிமிடங்கள் சமைக்கவும்.
பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி அரைத்த மசாலா பொடி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி வைத்து 15 நிமிடங்கள் சமைக்கவும்.
சிக்கன் மென்மையாக மாறியதும் சிறிது மசாலா பொடியை தூவி, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
சுவையான குண்டூர் சிக்கன் மசாலா தயார்! சாதம், சாம்பார் அல்லது ரசத்துடன் சூடாகப் பரிமாறவும்.
Pic Courtesy: Freepik