Masala Omelette Recipe in Tamil: நல்ல பசி இருக்கும் போது வீட்டில் எதுவுமே இல்லை என்றாலும், இரண்டு முட்டை இருந்தால் போதும் ஒரு ஆம்லெட் செய்து சாப்பிட்டால் போதும், பசி அப்படியே அடங்கிவிடும். எப்பவும் ஒரே மாதிரியாக ஆம்லெட் செய்து சாப்பிட்டு உங்களுக்கு போர் அடிக்கிறதா? அப்போ இந்த முறை மசாலா ஆம்லெட் செய்து சாப்பிடுங்க. வாருங்க மசாலா ஆம்லெட் எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 6
வால்நட் - 1/2 கப் நறுக்கியது
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
பூண்டு - பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை - நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
இந்த பதிவும் உதவலாம்: Paneer Yakhni: உங்களுக்கு பன்னீர் பிடிக்குமா? ஒருமுறை பன்னீர் யாக்னி செய்து சாப்பிடுங்கள்!
மசாலா ஆம்லெட் செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, வால்நட் சேர்த்து, அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊறவிடவும்.
- வேறொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அதை ஊறவைத்த மசாலா கலவையில் ஊற்றி கலந்துவிடவும்.
- ஒரு தவாவில், எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி முட்டை மசாலாவை ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மறுபக்கம் திருப்பி போடவும்.
- இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
மசாலா ஆம்லெட் ஆரோக்கிய நன்மைகள்
அதிக புரத உள்ளடக்கம்: முட்டைகள் ஒரு முழுமையான புரதமாகக் கருதப்படுகின்றன. அதாவது, அவை உங்கள் உடலின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்புக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டிருக்கின்றன.
கோலின் மூலம்: முட்டைகளில் மூளை ஆரோக்கியம் மற்றும் செல் செயல்பாட்டிற்கு முக்கியமான ஊட்டச்சத்து கோலின் நிறைந்துள்ளது.
எடை மேலாண்மைக்கான சாத்தியம்: அதிக புரத உள்ளடக்கம் காரணமாக, ஆம்லெட் நீண்ட நேரம் திருப்தி அடைய உதவும். இது எடை மேலாண்மைக்கு உதவும்.
வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள்: முட்டைகளில் வைட்டமின் ஏ மற்றும் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது கண் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்.
Pic Courtesy: Freepik