Ellu Sadam: ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை போக்கும் எள்ளு சாதம்... இதோ ரெசிபி!

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட எள்ளு சாதம் எப்படி செய்வது தெரியுமா? இதோ உங்களுக்கான ரெசிபி.
  • SHARE
  • FOLLOW
Ellu Sadam: ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை போக்கும் எள்ளு சாதம்... இதோ ரெசிபி!

Sesame Rice In Tamil: எள் காலம் காலமாக ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. எள் பல ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. இது, மாதவிடாய் பிரச்சனையை தவிர இதயம், கொலஸ்ட்ரால் என பல பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த எள்ளு சாதம் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எள்ளு பொடி செய்ய

கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 8
மிளகு - 1 தேக்கரண்டி
புளி - சிறிது
கொப்பரை தேங்காய் - 1 மேசைக்கரண்டி
எள்ளு - 3 மேசைக்கரண்டி
கல் உப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

இந்த பதிவும் உதவலாம்: Garlic Egg Fry: சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற பூண்டு முட்டை வறுவல் எப்படி செய்வது?

எள்ளு சாதம் செய்ய

எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 2
கறிவேப்பிலை
வேகவைத்த சாதம்
எள்ளு பொடி - 3 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி

எள்ளு சாதம் செய்முறை:

Ellu Sadam Recipe - Sesame Rice

  • கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
  • பின்பு சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
  • மிளகு, புளி சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பின்பு கொப்பரை தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
  • பின்பு எள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • பிறகு கல் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
  • நன்கு ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
  • அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும்.
  • பின்பு கடுகு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
  • பிறகு வேகவைத்த சாதத்தை சேர்த்து கலந்துவிடவும்.
  • பின்பு எள்ளு பொடி சேர்த்து கலந்து கடைசியாக நெய் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான எள்ளு சாதம் தயார்.

எள்ளு சாதம் ஆரோக்கிய நன்மைகள்:

Ellu sadam (Til Rice)

  • எள்ளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • எள்ளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் உள்ளன. இது எலும்புகளை பலப்படுத்துகிறது.
  • எள்ளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • எள்ளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.
  • எள்ளில் உள்ள லிக்னான்கள் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன.
  • எள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க உதவுகின்றன.
  • எள் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • எள் சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் மன அழுத்தத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Paneer Yakhni: உங்களுக்கு பன்னீர் பிடிக்குமா? ஒருமுறை பன்னீர் யாக்னி செய்து சாப்பிடுங்கள்!

Disclaimer