Masala Rice Recipe In Tamil: பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நாளை என்ன லஞ்ச் பாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். செய்த உணவையே செய்து நமக்கும் சளித்திருக்கும், சாப்பிட்ட அவர்களுக்கும் சலித்துப்போயிருக்கும். வீட்டில் எந்த காய்கறிகளும் இல்லாத சூழ்நிலையில், வீட்டில் உள்ள சில மசாலாப் பொருட்களை வைத்து சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாம். சுவையான மசாலா சாதம் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மசாலா தூள் செய்ய
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 8
பூண்டு - 6 பற்கள்
புளி - சிறிது
துருவிய தேங்காய் - 1 கப்
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
கல் உப்பு - 1 தேக்கரண்டி
இந்த பதிவும் உதவலாம்: Green Gram Vada: காஃபி டீக்கு ஏற்ற பச்சைப்பயறு வடை செய்வது எப்படி?
மசாலா சாதம் செய்ய
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வேர்க்கடலை - சிறிது
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரைத்த மசாலா தூள்
வேகவைத்த சாதம் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - 3 ஸ்பூன்
மசாலா சாதம் செய்முறை:
- ஒரு பானில் எண்ணெய், கடலை பருப்பு சேர்க்கவும்.
- கடலை பருப்பு வறுபட்டதும் சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
- கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், அதில் பூண்டு, புளி சேர்த்து வறுக்கவும்.
- இப்போது துருவிய தேங்காயை சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
- பெருங்காய தூள் மற்றும் கல் உப்பு சேர்க்கவும்.
- வறுத்த பொருட்களை தட்டில் மாற்றி ஆறவிடவும்.
- ஆறியதும் பொருட்களை மிக்சி ஜாடிக்கு மாற்றி சிறிது கொரகொரப்பாக அரைக்கவும்.
- அகலமான கடாயில் எண்ணெய் சேர்க்கவும். வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்.
- பிறகு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- இப்போது அரைத்த மசாலா தூள் சேர்க்கவும்.
- கடாயில் சாதம் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
- நெய் சேர்க்கவும்.
- மசாலா சாதம் அப்பளம் மற்றும் வத்தல் உடன் பரிமாற தயாராக உள்ளது.
Pic Courtesy: Freepik