Thuvaiyal Omelette: வெறும் 2 முட்டை இருந்தா போதும் சுவையான துவையல் ஆம்லேட் செய்யலாம்!

ஒரே மாதரி ஆம்லெட் சாப்பிட்டு போர் அடிக்குதா? அப்போ இந்த முறை இப்படி ஆம்லெட் செய்து சாப்பிடுங்க சுவை அட்டகாசமா இருக்கும்.
  • SHARE
  • FOLLOW
Thuvaiyal Omelette: வெறும் 2 முட்டை இருந்தா போதும் சுவையான துவையல் ஆம்லேட் செய்யலாம்!

Thuvaiyal Omelette Recipe in Tamil: நல்ல பசி இருக்கும் போது வீட்டில் எதுவுமே இல்லை என்றாலும், இரண்டு முட்டை இருந்தால் போதும் ஒரு ஆம்லெட் செய்து சாப்பிட்டால் போதும், பசி அப்படியே அடங்கிவிடும். எப்பவும் ஒரே மாதிரியாக ஆம்லெட் செய்து சாப்பிட்டு உங்களுக்கு போர் அடிக்கிறதா? அப்போ இந்த முறை துவையல் ஆம்லேட் செய்து சாப்பிடுங்க. வாருங்க மசாலா ஆம்லெட் எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
காய்ந்த மிளகாய் - 6
சீரகம்
புளி - 3 துண்டு
துருவிய தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை
கல் உப்பு - 1 தேக்கரண்டி
துவையல் - 2 தேக்கரண்டி
முட்டை - 1
நல்லெண்ணெய்

இந்த பதிவும் உதவலாம்: Schezwan Paneer: உங்களுக்கு பன்னீர் பிடிக்குமா? ஒரு முறை இப்படி செஸ்வான் பன்னீர் செய்து சாப்பிடுங்க!

துவையல் ஆம்லேட் செய்முறை:

Basic omelette

  • முதலில் ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  • பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.
  • பின்பு சீரகம், புளி, துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
  • அடுத்து கல் உப்பு சேர்த்து கலந்துவிட்டு நன்கு ஆற விடவும்.
  • ஆறிய மசாலாவை மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீரின்றி அரைக்கவும்.பிறகு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரைத்த துவையல் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
  • பிறகு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் முட்டை கலவையை ஊற்றவும்.
  • ஒரு பக்கம் வெந்தவுடன் மறு பக்கம் திருப்பி விட்டு வேகவிட்டு எடுத்தால், அருமையான துவையல் ஆம்லேட் தயார்.

ஆம்லெட் ஆரோக்கிய நன்மைகள்

Surati Omlet, Rajpipla Locality order online - Zomato

அதிக புரத உள்ளடக்கம்: முட்டைகள் ஒரு முழுமையான புரதமாகக் கருதப்படுகின்றன. அதாவது, அவை உங்கள் உடலின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்புக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டிருக்கின்றன.

கோலின் மூலம்: முட்டைகளில் மூளை ஆரோக்கியம் மற்றும் செல் செயல்பாட்டிற்கு முக்கியமான ஊட்டச்சத்து கோலின் நிறைந்துள்ளது.

எடை மேலாண்மைக்கான சாத்தியம்: அதிக புரத உள்ளடக்கம் காரணமாக, ஆம்லெட் நீண்ட நேரம் திருப்தி அடைய உதவும், இது எடை மேலாண்மைக்கு உதவும்.

வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள்: முட்டைகளில் வைட்டமின் ஏ மற்றும் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது கண் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Fenugreek Seed: அட இவர்கள் எல்லாம் வெந்தயம் ஊறவைத்த நீர் குடிக்க கூடாது? ஏன் தெரியுமா?

Disclaimer