Karuveppilai Chicken: லெமன் சிக்கன் தெரியும்... அதென்ன கறிவேப்பிலை சிக்கன்... இதோ ரெசிபி!

எப்பவும் ஒரே மாதரி சிக்கன் செய்து போர் அடிக்குதா? அப்போ இந்த முறை கறிவேப்பிலை சிக்கன் சுக்கா செய்து பாருங்க. சுவை வேற லெவலில் இருக்கும். அது மட்டும் அல்ல, வீட்டில் உள்ளவங்க மறுபடியும் செய்ய சொல்லுவாங்க.
  • SHARE
  • FOLLOW
Karuveppilai Chicken: லெமன் சிக்கன் தெரியும்... அதென்ன கறிவேப்பிலை சிக்கன்... இதோ ரெசிபி!


Karuveppilai Chicken Sukka Recipe In Tamil: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது உண்மை. ஏனென்றால், ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது. நீங்கள் அறியாமல் செய்யும் உணவு தொடர்பான தவறால், பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

எனவே, ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம். எப்பவும் ஒரே மாதரி சிக்கன் சுக்கை செய்து போர் அடிக்குதா? அப்போ இந்த முறை கறிவேப்பிலை சிக்கன் சுக்கா செய்து பாருங்க. சுவை வேற லெவலில் இருக்கும். வாருங்கள் சுவையான கறிவேப்பிலை சிக்கன் சுக்கா செய்வது எப்படி என பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அருமையான சுவையில் வீட்டிலேயே நுங்கு பாயாசம் செஞ்சி குடிங்க.. வெயிலுக்கு குளுகுளுனு இருக்கும்

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை
சிக்கன் - 1 கிலோ
காய்ந்த மிளகாய் - 7
மிளகு - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய் - 3
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை சிக்கன் சுக்கா செய்முறை:

Karuveppilai Chicken Fry Recipe- Curry Leaf Flavoured Chicken

  • கடாயில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து ஆறவிடவும்.
  • பின்பு கடாயில் தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து நன்கு ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்க்கவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிட்டு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பிறகு உப்பு, மஞ்சள் சேர்த்து கலந்து சிக்கனை சேர்த்து கலந்துவிடவும். 5 நிமிடம் வேகவிடவும்.
  • பின்பு உப்பு, அரைத்த மசாலா பொடியை சிறிது சிறிதாக சேர்த்து கலந்துவிட்டு வேகவிடவும்.
  • தண்ணீர் வற்றி வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை சிக்கன் சுக்கா தயார்!

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Dosa: உடல் எடை குறைய புரோட்டீன் நிறைந்த ராகி பச்சைப்பயிறு தோசை செய்முறை!

கறிவேப்பிலை சிக்கன் சுக்கா நன்மைகள்:

Curry Leaf Pepper Chicken | Steffi's Recipes

செரிமானத்தை மேம்படுத்தும்: கறிவேப்பிலை செரிமான நொதிகளைத் தூண்டி, உணவை உடைக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சினைகளைத் தடுக்கிறது. அவை குமட்டலைக் குறைக்கவும், வயிற்று வலியை ஆற்றவும் உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: கறிவேப்பிலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், உடலை தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும் மிகவும் முக்கியமானது. அவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கும் பிற ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்களையும் கொண்டிருக்கின்றன.

எடை மேலாண்மைக்கான சாத்தியம்: சில ஆய்வுகள், கறிவேப்பிலை செரிமானத்திற்கு உதவுவதன் மூலமும், உடலை நச்சு நீக்குவதன் மூலமும், கொழுப்பு குவிவதைத் தடுப்பதன் மூலமும் எடை இழப்புக்கு பங்களிக்கும் என்று கூறுகின்றன. அவை கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவக்கூடும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Mango Rava Kesari: மாங்காய் சீசன் வந்தாச்சு... குழந்தைகளுக்கு பிடித்த சுவையான மாம்பழ கேசரி செய்யலாமா?

பிற சாத்தியமான நன்மைகள்: கறிவேப்பிலை புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் மூலமாகும். இது இரும்புச்சத்து உட்பட, இரத்த சோகையைத் தடுக்க உதவும். அவை நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருக்கலாம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உதவியாக இருக்கும். சில வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அவற்றில் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Pic Courtesy: Freepik

Read Next

கஞ்சிக்கு ஏற்ற Side Dish.. சுண்டி இழுக்கும் வாசனை.. கருவாட்டு குழம்பு அருமை தெரியுமா.? நன்மைகள் இங்கே..

Disclaimer