Ragi Pachcha Payir Dosa In Tamil: பெரும்பலான வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கலாகத்தான் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு வீட்டிலும் தோசை பிரியர்களுக்கு பஞ்சம் இருக்காது. மூன்று வேலை தோசை கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் விரும்பி சாப்பிடும் பலர் உள்ளனர். இவர்களை தோசை பிரியர்கள் என்பதற்கு பதில் தோசை வெறியர்கள் என்று கூறலாம்.
அப்படி நமக்கு பிடித்த தோசையை இன்னும் ஆரோக்கியமாக சாப்பிட்டால் எப்படி இருக்கும். வாருங்கள், ஆரோக்கியம் நிறைந்த ராகி பச்சைப்பயிறு தோசை எப்படி செய்வது, இதன் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மாம்பழம் சாப்பிட்ட உடனேயே இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க...!
தேவையான பொருட்கள்:
ராகி - 1 கப்
பச்சைப்பயிறு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
சீரகம் - 1 தேக்கரண்டி
கல் உப்பு - 1 தேக்கரண்டி
நெய் - சிறிது
ராகி பச்சைப்பயிறு தோசை செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ராகி, பச்சைப்பயிறு, உளுத்தம் பருப்பு சேர்த்து கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் ஊறவிடவும்.
- பின்பு மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைக்கவும்.
- தோசை கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும்.
- சுற்றிலும் நெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
- ஆரோக்கியமான ராகி பச்சைப்பயிறு தோசை தயார்!
ராகி பச்சைப்பயிறு தோசை ஆரோக்கிய நன்மைகள்
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: ராகியின் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற தேர்வாக அமைகிறது.
எலும்பு ஆரோக்கியம்: ராகியில் உள்ள அதிக கால்சியம் உள்ளடக்கம் வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு பங்களிக்கிறது.
செரிமான ஆரோக்கியம்: ராகியின் நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தையும் வழக்கமான குடல் இயக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
எடை மேலாண்மை: ராகியின் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு, திருப்தியை ஊக்குவிப்பதன் மூலமும் பசியைக் குறைப்பதன் மூலமும் எடை மேலாண்மைக்கு உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Aloe Vera: காயங்களை குணப்படுத்த கற்றாழை உதவுமா? இதை எப்படி பயன்படுத்துவது?
முடி மற்றும் தோல் ஆரோக்கியம்: ராகியில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முடி கெரட்டின் புரதத்தை அதிகரிக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும், முடியை வலுப்படுத்தவும் உதவும். இதில் முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன.
பிற நன்மைகள்: ராகி இரத்த சோகைக்கு உதவுகிறது, நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Pic Courtesy: Freepik