Healthy Flour For Weight Loss: இன்றைய நவீன காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் உடல் எடை அதிகமாகி பல்வேறு நோய்களைச் சந்தித்து வருகின்றனர். உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் முதலில் ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில் உடல் பருமனைக் குறைக்க உதவும் மாவு வகைகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
எடை இழப்பு பயணத்தில் உள்ளவர்கள், மாவு உபயோகத்தைக் குறைப்பது சாத்தியமற்ற ஒன்றாகும். அதே சமயம், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருள்களில் சில ஆரோக்கியமான மாவு வகைகளும் அடங்கும். எடைக் கட்டுப்பாட்டிற்கு எந்தெந்த மாவுகளை எடுத்துக் கொள்ளலாம் தெரியுமா?
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை சட்டுனு குறைக்க இஞ்சி மற்றும் மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க
எடை குறைய உதவும் மாவு வகைகள்
தேங்காய் மாவு
உடல் எடை குறைய விரும்புபவர்களுக்குச் சிறந்த தேர்வாக தேங்காய் மாவு அமைகிறது. தேங்காய் மாவு ஆனது உலர்ந்த தேங்காயை அரைத்து நேரடியாக தயாரிக்கப்படுகிறது. இவை தானியம் மற்றும் பசையம் அற்ற மாவு ஆகும். தேங்காய் மாவில் புரதம், நார்ச்சத்துக்கள், கொழுப்பு, இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. இவை மற்ற தானிய மாவுகளைப் போலல்லாமல், சிறிதளவு கொழுப்பைக் கொண்டிருப்பினும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதன் ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
குயினோ மாவு
குயினோவை அரைத்து நன்றாக தூளாக மாற்றி தயாரிக்கப்படுவதே குயினோ மாவு ஆகும். இது பசையம் அற்றதாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆற்றல் மையமாகவும் கருதப்படுகிறது. குயினோவில் நார்ச்சத்துக்கள், புரதம், இரும்பு, நிறைவுறா கொழுப்புகள் போன்றவை நிறைந்துள்ளன. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்துக் கொள்வதுடன், ஆரோக்கியமற்ற கலோரிகளைத் தவிர்க்க உதவுகிறது.
அமராந்த் மாவு
ராம்தானா அல்லது அமராந்த் மாவு என்பது பசையம் அற்ற புரதச்சத்து நிறைந்த மாவு ஆகும். அமராந்த் செடியின் விதைகளை அரைத்து இந்த மாவு தயார் செய்யப்படுகிறது. இதில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நார்ச்சத்துக்கள், அத்தியாவசிய மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இது போன்ற மாவை எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக, இவை நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Roti Or Rice For Weight Loss: உடல் எடை குறைய ரொட்டி அல்லது சாதம்! எது சாப்பிடலாம்?
பாதாம் மாவு
எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்கள் பாதாம் மாவை எடுத்துக் கொள்ளலாம். பாதாமை நன்கு தூளாக அரைத்து பாதாம் மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், இந்த மாவும் பசையம் அற்றதாகும். பாதாமில் வைட்டமின் ஈ சத்துக்கள், கால்சியம், மக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளனது. இது உடல் ஆரோக்கியத்திற்கும், எடை இழப்புக்கும் உதவக்கூடியதாக அமைகிறது.
முழு கோதுமை
முழு கோதுமை மாவும் பசையம் அல்லாத மாவு ஆகும். இதில் இரும்புச்சத்து, மக்னீசியம், புரதம், நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். இதன் அதிகப்படியான ஊட்டச்சத்து மதிப்பால், நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இவை உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.
ஓட்ஸ் மாவு
ஓட்ஸை அரைத்துத் தயாரிக்கப்படும் மாவு ஓட்ஸ் மாவு ஆகும். இவை ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த சிறந்த ஆதாரமாகும். இவை நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றல் அளவைத் தருகிறது. கூடுதலாக, இதில் கிளைசெமிக் குறியீடு அளவு குறைவாக உள்ளதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இது செரிமான அமைப்பு மற்றும் எடை இழப்புக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த வகை மாவு வகைகளில் தினமும் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம். எனினும், உடல் எடை குறைய புதிய பொருள்களைத் தேர்வு செய்யும் முன் நிபுணர் அல்லது மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Fenugreek For Weight Loss: உடல் எடை சீக்கிரம் குறைய வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க.
Image Source: Freepik