How to use barley for weight loss: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பும் அடங்கும். இந்நிலையில், உடல் எடையைக் குறைப்பதற்கு உணவில் சில மாற்றங்களைச் செய்வது அவசியமாகும். ஆரம்பத்தில் உணவு அல்லது வாழ்க்கை முறைகளில், எந்த மாற்றத்தையும் ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால், இவற்றுக்குப் பழகும் போது, அதைப் பின்பற்றுவது எளிதாகி விடலாம்.
எடையை இழப்பதற்கு ஓட்ஸ், தினை, ராகி, கோதுமை போன்ற பல்வேறு தானியங்களை அன்றாட உணவில் சேர்ப்பது அவசியமாகும். இந்த வரிசையில் பார்லியும் ஒன்றாகும். நீர் தக்கவைப்பு அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவற்றின் காரணமாக எடை அதிகரித்திருப்பின் பார்லியை எடுத்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும். ஆனால், இதை வெவ்வேறு வழிகளில் உணவில் சேர்க்கலாம். இதில் எடையிழப்புக்கு உணவில் பார்லியைச் சேர்ப்பதற்கான வழிகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஜிம்க்குலாம் போக வேணாம்.. சீக்கிரம் வெயிட் குறைய இந்த ஹோம் ரெமிடிஸ் ட்ரை பண்ணுங்க
எடை இழப்பில் பார்லி எவ்வாறு உதவுகிறது?
பார்லியில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை நீண்ட காலத்திற்கு பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இவை கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. இதன் நுகர்வு வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இவை கலோரிகளை எரிக்கத் தொடங்குகிறது. இது பசையம் இல்லாத மற்றும் கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்க உதவக்கூடியதாகும். பார்லி ஹார்மோன்களை அதிகரிக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
எடையிழப்புக்கு உணவில் பார்லியைச் சேர்ப்பதற்கான வழிகள்
உடல் எடையைக் குறைப்பதற்கு அன்றாட உணவில் பார்லியை எவ்வாறு சேர்க்கலாம் என்பது குறித்து காணலாம்.
பார்லி ரொட்டி
எடையிழப்புக்கு பார்லி ரொட்டி ஒரு நல்ல மற்றும் சிறந்த தேர்வாகும். இதற்கு கோதுமை மாவுக்கு பதிலாக பார்லி மாவைப் பயன்படுத்தலாம். பார்லியை அரைத்து வீட்டிலேயே அதன் மாவைத் தயார் செய்யலாம். இது தவிர, கோதுமை மாவுடன் சேர்த்து அதன் மாவையும் சாப்பிடலாம். பார்லி ரொட்டியில் குறைந்த அளவிலான கலோரிகள் இருப்பதால், இவை விரைவாக வயிற்றை நிரப்ப உதவுகிறது.
பார்லி சூப்
எடை இழப்புக்கு சிறந்த இரவு உணவுகளில் ஒன்றாக பார்லி சூப்பைத் தயார் செய்து குடிக்கலாம். இது ஒரு லேசான இரவு உணவிற்கு சரியான வழியாக அமைகிறது. பார்லி சூப்பைத் தயார் செய்வதற்கு, தக்காளி, வெங்காயம், பார்லி, கேரட், கொத்தமல்லி மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம். இரவு உணவிற்கு ஒரு கிண்ணம் அளவிலான பார்லி சூப் குடிக்கலாம். இது செரிமான அமைப்பை தளர்த்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வேகமாக எடை குறைய ஆளி விதையை எப்போது... எப்படி சாப்பிடணும் தெரியுமா?
பார்லி தேநீர்
ஒரு நாளைக்கு ஒரு முறை பார்லி தேநீரைத் தயார் செய்து குடிக்கலாம். எந்த உடல்நலப் பிரச்சினையும் கொண்டிருக்கவில்லை என்றால், இதை வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். தேநீரைத் தயார் செய்வதற்கு, ஒரு கப் அளவிலான தண்ணீரில் பார்லியை கொதிக்க வைக்க வேண்டும். இப்போது இதை வடிகட்டி இந்த தண்ணீரைக் குடிக்கலாம்.
பார்லி டாலியா
எடை இழப்புக்கு பார்லி கஞ்சி ஒரு சிறந்த வழியாகும். இதை காலை உணவு அல்லது மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் இருப்பதால், இவை செரிமானம் செய்ய எளிதானதாகும். மேலும், பார்லி கஞ்சி தயாரிக்க அதில் சில காய்கறிகளைச் சேர்க்கலாம். இவை நீண்ட நேரம் திருப்தியாக வைத்திருக்கவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
இதில் குறிப்பிட்டுள்ளபடி, உடல் எடையிழப்புக்கு பார்லியை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். எனினும், வேறு ஏதேனும் சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், அதை உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்புக்கு ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை கலோரிகளை உட்கொள்ள வேண்டும்.? நிபுணரின் விளக்கம் இங்கே..
Image Source: Freepik