Saffron benefits for weight loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இவ்வாறு உடல் எடையைக் குறைக்கவும், கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும் உணவுப்பொருள்களில் குங்குமப்பூவும் அடங்கும்.
நாம் அனைவரும் குங்குமப்பூவை சரும பராமரிப்பில் பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆனால், குங்குமப்பூ ஆனது உடல் எடை இழப்பிலும் பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? குங்குமப்பூ அதன் துடிப்பான நிறம் மற்றும் சுவைக்காக நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். மேலும், இதன் சமையல் பயன்பாடுகளுக்கு அப்பால், குங்குமப்பூ பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. எடை இழப்பை மேம்படுத்த குங்குமப்பூ குறிப்பிடத்தக்க வகையில் நன்மை தருகிறது. இதில் எடையிழப்புக்கு குங்குமப்பூ தரும் நன்மைகள் மற்றும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Sourdough Bread: எடையை மாஸ் வேகத்தில் குறைக்கும் புளிப்பு ரொட்டி! எப்படினு பாருங்க
உடல் எடை குறைய குங்குமப்பூ தரும் நன்மைகள்
- குங்குமப்பூவில் குரோசின் குரோசின் மற்றும் சஃப்ரானல் போன்ற உயிர்வேதியியல் கலவைகள் நிறைந்துள்ளது. இந்த கலவைகள் பசியின்மை கட்டுப்பாட்டிற்கும், மனநிலை மேம்பாட்டிற்கும் உதவுகிறது.
- ஆய்வு ஒன்றில், குங்குமப்பூ சாறு உட்கொள்வது சிற்றுண்டியை திறம்பட குறைத்து, தேவையான கலோரி பற்றாக்குறையை ஊக்குவித்து உடல் எடையிழப்பை மேம்படுத்துகிறது.
- இது தவிர, வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும், இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
- மேலும் குங்குமப்பூவில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கவும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் எடை இழப்புக்கு உதவும் எனக் கூறப்படுகிறது.

உடல் எடையைக் குறைக்க குங்குமப்பூவை எவ்வாறு சேர்ப்பது?
சிவப்பு நிறத்தில் இருக்கும் குங்குமப்பூ, தொடுவதற்கு உலர்ந்த மற்றும் உடையக் கூடியதாக அமையும். கூடுதலாக, இது வலுவான மற்றும் புதிய வாசனை உடையதாகும். உணவில் குங்குமப்பூவை எவ்வாறு சேர்க்கலாம் என்பது குறித்து காணலாம்.
குங்குமப்பூ நூல்
பசியைக் கட்டுப்படுத்த, குங்குமப்பூவை சாற்றாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஒரு சிட்டிகை குங்குமப்பூ கலந்த சாற்றை, ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறந்த பலனைப் பெறலாம். சிறந்த பலனைப் பெற, குங்குமப்பூ சாற்றைத் தினமும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தொங்கும் தொப்பையைக் குறைக்க நட்ஸ் உடன் இதையும் சேர்த்து சாப்பிடுங்க!
குங்குமப்பூ நீர்
எடையிழப்புக்கு உணவில் குங்குமப்பூவை சேர்க்கும் மற்றொரு வழியாக குங்குமப் பூ நீர் அருந்தலாம். ஐந்து முதல் ஏழு குங்குமப்பூ இழைகளை வெந்நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து உட்கொள்ளலாம். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு காலையில் வெறும் வயிற்றில் குங்குமப்பூ நீரை அருந்துவது பசியைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடல் எடையிழப்புக்கும் உதவுகிறது.
குங்குமப்பூ சப்ளிமெண்ட்ஸ்
நாள்தோறும் வெறும் வயிற்றில் ஒரு காப்ஸ்யூலை உட்கொள்வது, உணவில் குங்குமப்பூவைச் சேர்க்கலாம். சிறந்த முடிவுகளைப் பெற, குங்குமப்பூவைச் சில வாரங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்திய பிறகு குறைந்தது 2 வாரங்களுக்கு இடைவெளி எடுத்து, சுழற்சி முறையில் குங்குமப்பூவை உட்கொள்ளலாம்.
இவ்வாறு குங்குமப்பூவை ஆரோக்கியமான வழிகளில் தேர்வு செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். எனினும், இது விரைவில் உடல் எடையைக் குறைக்கும் மசாலா அல்ல. தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சமநிலைப்படுத்த உடல் எடையிழப்புக்கு அன்றாட உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்வதாகும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ஆரோக்கியமான உணவுடன் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Belly fat lose drink: தொப்பை வெண்ணெய் போல கரைய தினமும் இந்த ட்ரிங்ஸ் குடிங்க!
Image Source: Freepik