$
Is Okra Water Good For Weight Loss: இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக உடல் எடை அதிகமாகி பலரும் சிரமப்படுகின்றனர். ஆனால் உடல் எடையைக் குறைப்பது பலருக்கும் சவாலாக உள்ளது. குறிப்பாக உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் உணவுக் கட்டுப்பாட்டு முறையைக் கையாள்வது அவசியமாகும்.
உடல் எடை குறைய சில ஆரோக்கியமான பானங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் உடல் எடை இழப்புக்கு ஓக்ரா தண்ணீர் சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் உடல் எடையைக் குறைக்க அருந்த வேண்டிய ஓக்ரா நீர் மற்றும் இது எவ்வாறு உடல் எடை இழப்புக்கு உதவுகிறது என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Spinach For Weight Loss: உடல் எடையைக் குறைக்க கீரையை இப்படி சாப்பிடுங்க
ஓக்ரா நீர்
உணவுப் பொருளான வெண்டைக்காயை ஓர் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து தயாரிக்கப்படுவது ஓக்ரா நீர் எனப்படுகிறது. இதில், வெண்டைக்காய்களை வெட்டி நீரில் ஊறவைப்பது, ஊட்டச்சத்துக்களை தண்ணீரில் சேர அனுமதிக்கிறது.
ஓக்ரா காயில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு போன்றவை நிறைந்துள்ளன. குறிப்பாக ஓக்ராவில் மாங்கனீசு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவும் முக்கியமான கனிமமாகும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதுடன், நோயெதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

எடை இழப்புக்கு ஓக்ரா நீர் உதவுவது எப்படி? (How To Lose Weight With Okra Water)
ஓக்ரா நீரில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் நுகர்வு வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. மேலும் ஓக்ராவில் ஃபிளவனாய்டுகள், பாலிபினால்கள் போன்ற கலவைகள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதுடன், கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
மேலும் ஓக்ரா வாட்டர் அருந்துவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது உடலில் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இன்சுலின் எதிர்ப்பு என்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மாதவிடாய், ஹைப்போ தைராய்டிசம், PCOS போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். குறிப்பாக, இன்சுலின் எதிர்ப்புக்கு உடல் எடை அதிகரிப்பு முக்கிய காரணியாக உள்ளது.
ஓக்ரா நீரைக் கொண்டு இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன் எடை நிர்வாகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் எடையிழப்பு மற்றும் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறைக்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Masoor Dal For Weight Loss: உடல் எடையை வேகமா குறைக்க மசூர் பருப்பை இப்படி சாப்பிடுங்க
ஓக்ரா தண்ணீர் எப்படி செய்வது?
தேவையான பொருள்கள்
- ஓக்ரா காய்கள்
- தண்ணீர்
செய்முறை
- புதிய ஓக்ரா காய்கறி நறுக்கி, முந்தைய நாள் இரவில் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
- மறுநாள் இந்த ஊறவைத்த காய்களைப் பிழிந்து தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
இவ்வாறு அருந்துவது உடல் எடையைக் குறைப்பதுடன், உடல் புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

எடை குறைய ஓக்ரா தண்ணீர் குடிக்க சிறந்த நேரம் எது?
ஓக்ரா தண்ணீர் அருந்துவது செரிமானத்தை ஆதரிக்கவும், எடையிழப்பு நன்மைகளை மேம்படுத்தவும் உதவுகிறது. இதற்கு காலையில் அல்லது உணவுக்கு முன் ஓக்ரா நீரை அருந்தலாம். எனினும் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் ஓக்ரா வாட்டரை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு ஓக்ரா தண்ணீர் அருந்துவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Bamboo Rice Benefits: உடல் எடையை சட்டுனு குறைக்க இந்த அரிசியை எடுத்துக்கோங்க
Image Source: Freepik