How To Use Coconut Water For Weight Loss: கோடைக்காலத்தில் உடல் வெப்பநிலை ஏற்றவாறு மாற்றத்தைக் கொண்டு வருவது அவசியமாகும். உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். கோடைக்காலத்தில் உடல் வியர்வை மூலம் தொடர்ந்து நீர் இழக்கப்படுகிறது. எனவே போதுமான நீராதாரம் இல்லததால் நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படலாம்.
இதற்கு கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகிறது. வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள சர்க்கரை பானங்கள், ஐஸ்கிரீம்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோடைகாலத்தில் உடல் எடை குறைய
கோடைக்காலத்தில் எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். இந்த காலகட்டத்தில் பசியின்மை சற்று குறைவாக இருக்கும். எனினும் ஏராளமான நீரேற்றம் செய்யும் பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க தேங்காய் தண்ணீர் சிறந்த பானமாகக் கருதப்படுகிறது. இது குறைந்த கலோரிகள் மற்றும் சர்க்கரையை அதிகரிக்காத உடலை நீரேற்றமடையைச் செய்யும் பானமாகும். மேலும் இது நீண்ட நேரம் முழுமை உணர்வைத் தருவதால், உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. இந்த அற்புத பானம் உடல் எடை குறைய எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இது ஒன்னு மட்டும் சாப்பிடுங்க. நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு வெயிட் குறையும்
எடை இழப்புக்கு தேங்காய் தண்ணீர்
உடல் எடையைக் குறைக்க தேங்காய் தண்ணீர் எவ்வாறு உதவுகிறது என்பதை உணர்த்தும் சில காரணங்களைக் காணலாம்.
குறைந்த கலோரிகள்
பழச்சாறுகள் அல்லது சோடாக்கள் போன்ற பல்வேறு சர்க்கரை நிறைந்த பானங்களுடன் ஒப்பிடுகையில் தேங்காய் நீரில் குறைந்தளவு கலோரிகள் உள்ளது. சராசரியாக 240 மில்லி லிட்டர் அளவிலான தேங்காய் தண்ணீரில் சுமார் 45-60 கலோரிகள் உள்ளது. அதிக கலோரி உள்ள பானங்களுக்கு மாற்றாக தேங்காய் நீரைத் தேர்ந்தெடுப்பது உடலில் கலோரிகளைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமான எடை இழப்புக்கும் உதவுகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
தேங்காய் நீரில் மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உடலில் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் சீரான எடை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நீரேற்றமிக்க தேங்காய் நீர்
உடல் எடை இழப்புக்கு நீரேற்றமாக இருப்பது அவசியமாகும். இது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. தேங்காய் நீரின் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் எலக்ட்ரோலைட் போன்றவற்றால் உடலுக்கு இயற்கையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Protein Powder: உடல் எடை அதிகரிக்க புரோட்டீன் பவுடரை வீட்டிலேயே இப்படி செய்யுங்க
பசியைக் குறைக்க
சில ஆய்வுகளில், தேங்காய் நீரில் பசியைக் குறைக்கும் பண்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. உணவுக்கு முன்னதாக தேங்காய் நீரை அருந்துவது முழுமையான உணர்வைத் தருவதுடன், ஒட்டுமொத்தமாக குறைந்த கலோரிகளை உட்கொள்வதாக அமைகிறது. இது காலப்போக்கில் உடல் எடை இழப்புக்கு பங்களிக்கிறது.
எலக்ட்ரோலைட் சமநிலை
தேங்காய் நீர் இயற்கையாகவே எலக்ட்ரோலைட்டுகளின் மூலமாகும். இது உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சரியான எலக்ட்ரோலைட் சமநிலை உடற்பயிற்சிக்கு உகந்த நீரேற்ற அளவை ஆதரிக்கிறது. இது உடலின் செயல்திறனை மேம்படுத்தி, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீட்க
தேங்காய் நீரில் உள்ள எலக்ட்ரோலைட் காரணமாக இது இயற்கையான விளையாட்டுப் பானமாகக் கருதப்படுகிறது. உடற்பயிற்சிக்குப் பின் தேங்காய் நீரை உட்கொள்வது வியர்வையின் மூலமாக இழந்த எலக்ட்ரோலைட்டுகளை நிரப்ப உதவுகிறது.
இவ்வாறு தேங்காய் நீர் உடல் எடை இழப்பு பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுக்கு முன்னதாக ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீர் குடிப்பது நன்மை தரும். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் தேங்காய் தண்ணீர் அருந்துவது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது ஆரோக்கியமான கூடுதலாக இருப்பினும், சீரான உணவின் ஒரு பகுதியாக மிதமாக உட்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Fruits For Weight Loss: எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த பழங்களை கட்டாயம் தவிர்க்கணும்
Image Source: Freepik