How To Apply Coconut Water For Skin: இளநீர் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஒரு இயற்கை பானமாகும். இது நீரேற்றமாக வைத்திருப்பதுடன், மற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த புத்துணர்ச்சியூட்டும் பானம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் தண்ணீரை அருந்துவது சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இது முகப்பரு போன்ற பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும், கோடைக்கால சரும பராமரிப்பு முறைகளில் தேங்காய் தண்ணீரை பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இளநீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பச்சை தேங்காயில் காணப்படும் திரவமே இளநீர் என அழைக்கப்படுகிறது. தேங்காய் நீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை எலக்ட்ரோலைட்டுகளின் இயற்கையான மூலமாகும். தேங்காய் தண்ணீரை இளம் தேங்காயில் இருந்து எடுத்துக் கொள்வது சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் இளம் தேங்காயானது இளநீர் எனவும் அழைக்கப்படுகிறது. சரும பராமரிப்பில் இளநீர் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric Face Pack: சருமத்தை பொலிவாக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்! இந்த பொருள்களோட சேர்த்து யூஸ் பண்ணுங்க
சருமத்திற்கு இளநீர் தரும் நன்மைகள்
வறண்ட சருமத்தை மென்மையாக்க
குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் அருந்துவது மிகவும் நன்மை பயக்கும். இதற்கு தேங்காய் நீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பிற ஹைட்ரேட்டிங் கலவையே காரணமாகும். இது சரும செல்களில் ஈரப்பதத்தை நிரப்ப உதவுகிறது.
மேம்படுத்தப்பட்ட நெகிழ்ச்சித் தன்மை
சருமத்தை நெகிழ்ச்சியாக வைத்திருக்க கொலாஜன் என்ற புரதம் அவசியமாகும். தேங்காய் நீரானது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவு ஆதாரமாக விளங்குகிறது. இது இளமை மற்றும் உறுதியான சரும ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது.
முதுமை எதிர்ப்புப் பண்புகள்
தேங்காய் நீரில் உள்ள சைட்டோகினின்கள், முதுமை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை செல் மீளுருவாக்கத்தின் மூலம் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், இந்த நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Vampire Facial: வாம்பயர் ஃபேஷியல் செய்ய போறீங்களா? அப்ப முதல்ல இத பாருங்க
முகப்பரு மற்றும் எண்ணெய் பாதிப்புள்ள சருமத்திற்கு
தேங்காய் தண்ணீரில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக இளநீர் உதவுகிறது. தேங்காய் நீரில் உள்ள லாரிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. இது சருமத்தின் எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. இது முகப்பரு அல்லது எண்ணெய் பாதிப்பு கொண்ட சருமத்திற்கு இளநீர் நன்மை பயக்கும்.
வெயிலைத் தணிக்க
அதிக சூரிய ஒளியால் சரும பாதிப்பு ஏற்படலாம். இது சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற சரும நிலைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். தேங்காய் நீரில் உள்ள குளிர்ச்சி மற்றும் நீரேற்றமிக்க பண்புகள் சூரிய ஒளி தாக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இளநீரை சரும பராமரிப்பில் பயன்படுத்தும் முறை
இளநீரை அருந்துவது சருமத்திற்கு அதிக நன்மையை அளிக்கிறது. இதில் சரும பராமரிப்பு வழக்கத்தில் இளநீர் பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.
ஃபேஷியல் மிஸ்ட்
கோடையில் வெயிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், நீரேற்றம் மற்றும் புத்துணர்ச்சியுடன் வைக்க இளநீரை ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Saffron For Skin: கோடை வெப்பத்தில் சருமத்தை கூலாக்கும் குங்குமப்பூ! இப்படி யூஸ் பண்ணுங்க
இளநீர் ஸ்க்ரப்ஸ்
இளநீரை சர்க்கரை அல்லது வேறு சில இயற்கையான எக்ஸ்ஃபோலியன்ட்களுடன் சேர்த்து மென்மையான முக ஸ்க்ரப்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் இறந்த சரும செல்களை திறம்பட நீக்கி, பளபளப்பான நிறத்தைப் பெறலாம். எனினும், இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
ஐஸ் கியூப்ஸ்
இளநீரை க்யூப்ஸாக உறைய வைப்பதன் மூலம் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது வீக்கத்தைக் குறைப்பதுடன், எரிச்சல் மற்றும் சோர்வான சருமத்திற்கு நன்மை பயக்கும்.
இளநீர் ஃபேஸ்மாஸ்க்
தேங்காய் நீரின் ஈரப்பதமான பண்புகளைப் பெற வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் தயார் செய்யலாம். வறண்ட சருமத்திற்கு இளநீருடன் பிசைந்த வெண்ணெய் அல்லது தேனுடன் கலந்து பயன்படுத்தலாம்.
ஃபேஸ் டோனர்
இளநீரை சருமத்தில் டோனராக பயன்படுத்தலாம். இது சருமத்தின் துளைகளைப் புதுப்பிக்கவும், சுருக்கவும் உதவுகிறது. குளிர்ந்த தேங்காய் நீரை காட்டன் பஞ்சு ஒன்றில் தடவி, முகத்தை சுத்தம் செய்து மெதுவாக துடைக்க வேண்டும். எனினும், இயற்கை சர்க்கரை காரணமாக தேங்காய் நீரை டோனராகப் பயன்படுத்துவதற்கு முன்னதாக தண்ணீர் அல்லது கிரீன் டீயுடன் நீர்த்துப்போகச் செய்வது நன்மை பயக்கும்.
சரும பராமரிப்பு வழக்கத்தில் இளநீரை சேர்த்துக்கொள்வது சருமத்திற்கு ஊட்டமளிப்பதுடன், புத்துணர்ச்சியை அளிக்கிறது. எனினும், சருமம் உணர்திறன் மிக்கதென்பதால் சரும பராமரிப்பதற்கு முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Skin Tan Remedies: வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் கறையா? இந்த வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik