Home Remedies For Skin Tan In Summer: கோடைக்காலத்தில் சரும பராமரிப்பிற்கென தனி பாதுகாப்பு அவசியமாகும். வெயிலின் தாக்கத்தால் சருமம் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்சனைகள் உண்டாகலாம். இதற்கு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினாலும், உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு சூரிய ஒளியில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதில் சருமம் பழுப்பு நிறத்தில் தோன்றலாம். இதற்கு குறிப்பிடத்தக்க சில எளிய வீட்டு வைத்தியங்களைக் கையாள வேண்டும். இதில் ஸ்கின் டானிங் நீங்க நாம் கையாள வேண்டிய சில இயற்கை வைத்தியங்களைக் காணலாம்.
சருமத்தின் கறைகளை நீக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள்
தயிர்
தயிர் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்திற்கு சக்தி வாய்ந்த ஆற்றலைத் தருகிறது. தயிரில் புரதம், கால்சியம், வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. எனவே தயிரை சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளலாம். இது முகப்பருவைச் சமாளிக்கவும், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைக் குறைக்கவும் உதவுகிறது. ஒவ்வொரு இரவு தூங்கும் முன்னதாக சருமத்தில் தயிர் சேர்த்துக் கொள்ளவும். இது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Camphor Coconut Oil Benefits: சருமத்தை பளபளப்பாக தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்துகோங்க
கடலை மாவு
இது சருமத்திற்கு மிகுந்த நன்மையைத் தருகிறது. கடலை மாவுடன், வேறு சில பொருள்களைச் சேர்த்து பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மையைத் தருகிறது. இதனை கழுத்து, கைகள் மற்றும் முகத்தில் தடவுவது பழுப்பு நிறத்டை நீக்க உதவும் சிறந்த சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. இது சருமத்தைப் பிரகாசமாக வைப்பதுடன், இலகுவாக வைக்க உதவுகிறது.
தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவற்றின் வளமான மூலமாகும். இது அழகு சாதனப் பொருள்கள் மற்றும் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், செல் மீளுருவாக்கத்திற்கும், செல்லுலார் சேதத்திலிருந்து பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தில் பழுப்பு நிறத்தை நீக்குவதற்குப் பரிந்துரைக்கப்படும் சிறந்த தேர்வாக அமைகிறது.
வெள்ளரி சாறு
கோடைக்காலத்தில் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு வெள்ளரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்திற்கு ஆரோக்கியத்தைத் தருவதாகவும், வெப்பத்தால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் சிறந்த மருந்தாகவும் செயல்படுகிறது. வெள்ளரியை சருமத்திற்குப் பயன்படுத்துவது ஈரப்பதத்தை அளிக்கிறது. முதலில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர், வெள்ளரி சாற்றை முகத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். இது முகப்பருவைக் குறைத்து சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக வைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Ubtan: சருமத்தைப் பொலிவாக்கும் உப்டான். வீட்டிலேயே ஈஸியா இப்படி தயார் செய்யலாம்
கற்றாழை சாறு
கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகும். புதிய கற்றாழையிலிருந்து ஜெல்லை எடுத்து நேரடியாக சருமத்திற்கு தடவலாம். வேறு சில முறையாக, கற்றாழை ஜெல்லை சிறிது தண்ணீர் மற்றும் தேயிலை மரம் அல்லது லாவண்டர் போன்ற பிடித்தமான அத்தியாவசிய எண்ணெயில் சில துளிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை சருமத்திற்கு பயன்படுத்துவது நீண்ட கால நன்மையைத் தரும். மேலும் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இவ்வாறு இயற்கையான முறையில் வீட்டிலேயே உள்ள சில எளிய பொருள்களைப் பயன்படுத்தி சருமத்தில் உள்ள கறைகளை எளிதாக நீக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Orange Peel Powder: இனி ஆரஞ்சு தோல தூக்கி போடாதீங்க. சருமத்திற்கு இப்படி யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik