How To Prevent Summer Acne Breakouts: யாருக்குத்தான் முகப்பரு இல்லாத தெளிவான சருமம் பிடிக்காது. ஆனால், அப்படி பட்ட சருமத்தை பெறுவது எளிமையான விஷயம் அல்ல. தெளிவான சருமத்தை பெற சருமத்தை முறையாக பராமரிக்க வேண்டும். நம் அனைவருக்கும் வெவ்வேறு தோல் வகைகள் உள்ளன. சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும், சிலர் எண்ணெய் பசை சரும பிரச்சனைகளால் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக, முகத்தில் சிறிய முகப்பரு அடிக்கடி தோன்றும். இந்த வகையான பிரச்சனை எண்ணெய் சருமத்தில் மிகவும் பொதுவானது. இதனால், அவர்களின் முகத்தில் புள்ளிகள் மற்றும் கறைகள் தோன்றும்.
குறிப்பாக வெயில் காலத்தில் உஷ்ணத்தால் பருக்கள் தோன்றுவது இயல்பானது. பாருக்கள் இல்லாத முகமாக இருந்தால் கூட வெயில் காலத்தில் சிலருக்கு பருக்கள் எக்கச்சக்கமாக வெடிக்கும். இந்நிலையில், சருமத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இது குறித்து டாக்டர் சலோனி வோஹ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஹேக்குகளை பகிர்ந்துள்ளார். அவரை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Pimple Solution: மீண்டும் மீண்டும் முகப்பரு வருகிறதா? இதை சரிசெய்ய வழிகள்!
முகப்பரு வர காரணம் என்ன?

அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக முகப்பரு பிரச்சனை ஏற்படுகிறது. ஏனென்றால், நேரமின்மையால் சருமத்தை சரியாக பராமரிக்க முடியாமலும், சரியான உணவு உண்ணாமலும் இருப்பதால், முகப்பரு போன்ற பிரச்சனைகள் தோலில் தோன்ற ஆரம்பிக்கும். பல நேரங்களில், தவறான சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவதால், இந்த பிரச்சனை தோன்றத் தொடங்குகிறது.
முகப்பரு பிரச்சனையை குறைக்க சில டிப்ஸ்
தோலில் சிறிய முகப்பரு தோன்றத் தொடங்கும் போது, நாம் கவலைப்படுகிறோம். எனவே, இதை சரி செய்ய நாம் விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இல்லையெனில், சில சமயங்களில் சிகிச்சைகளை மேற்கொள்வோம். ஆனால், டாக்டர் சலோனி வோஹ்ரா கூறியதாவது, “ உங்களுக்கு முகப்பரு பிரச்சினை அதிகமாக இருந்தால், நீங்கள் பொடுகு எதிர்ப்பு ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும். இது சிக்கலைக் குறைக்கத் தொடங்கும்”.
இந்த பதிவும் உதவலாம் : Skin Infections: முகப்பரு இருந்தா இதெல்லாம் செய்யாதீங்க. இந்த சரும பிரச்சனைகளும் ஏற்படலாம்
பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவை எப்படி பயன்படுத்தனும்?

உங்கள் தோலில் சிறிய முகப்பரு இருந்தால், அதை சரிசெய்ய, பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைப் பயன்படுத்தவும். நீங்கள் 3 வாரங்களுக்கு ஒரு முறை இதை பயன்படுத்த வேண்டும் மற்றும் அதை தோலில் 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர், அதை தண்ணீரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உங்கள் சருமம் தெளிவாக இருக்கும். மேலும், உங்கள் தழும்புகளும் குறையும்.
இந்த விஷயங்களை மனதில் வைக்கவும்
- முகப்பருவைத் தவிர, சருமத்தின் வேறு எந்தப் பகுதியிலும் பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டாம்.
- நீங்கள் மேக்-அப் போடுபவராக இருந்தால், முகப்பரு பிரச்சனை வராமல் இருக்க, மேக்கப்பை நீக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- முகத்தில் கடுமையான ரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டாம். மூலிகை மற்றும் இயற்கை பொருட்களை மட்டும் முகத்தில் தடவவும்.
இந்த பதிவும் உதவலாம் : Remove Acne Scars: முகப்பருக்களை நீக்க பின்பற்ற வேண்டிய இயற்கையான முறைகள்
- முகத்தில் ரசாயனப் பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, வீட்டிலேயே ஃபேஷியல் மற்றும் க்ளீனப் சிகிச்சைகளைச் செய்யுங்கள். எதையும் பயன்படுத்துவதற்கு முன், பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
குறிப்பு: நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட முறையை முயற்சிக்கும் முன், தோல் பிரச்சனை அதிகரிக்காமல் இருக்க பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
Pic Courtesy: Freepik