$
Orange Peel Powder Benefits For Skin: சருமத்தை பளபளப்பாக, மென்மையாக வைக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். அதிலும் சருமத்தைப் பராமரிக்க சந்தையில் கிடைக்கும் பொருள்களை விட பலர் இயற்கையான வழிமுறைகளையே கையாள்கின்றனர். அந்த வகையில் சருமத்தைப் பராமரிக்க ஆரஞ்சு தோல் பவுடரைப் பயன்படுத்தலாம். இதில் சரும ஆரோக்கியத்திற்கு ஆரஞ்சு தோல் பவுடர் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.
சருமத்திற்கு ஆரஞ்சு தோல் பவுடரைப் பயன்படுத்துவது தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தைத் தருகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. ஆரஞ்சு தோலுடன் கூடிய ஃபேஸ்பேக்குகளைப் பயன்படுத்துவது சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Raw Milk For Skin: பால் போன்ற பளபளப்பான முகத்திற்கு பச்சைப்பாலை இப்படி யூஸ் பண்ணுங்க
ஆரஞ்சு தோல் பவுடர் செய்முறை
ஆரஞ்சு தோலை சிறிது சிறிதாக வெட்டி, வெயிலில் உலர்த்த வேண்டும். இந்த ஆரஞ்சு தோலை பவுடராக மாற்றும் முன்னதாக, காய்ச்சி வடிகட்டிய நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். தோல்களை பின்னர் ஒரு தட்டில் பரப்பி, நேரடியாக சூரிய ஒளி உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இந்த தோல்களை ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு வெயிலில் உலர வைத்து பொடியாக்கி, காற்று புகாதவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

சருமத்திற்கு ஆரஞ்சு தோல் பவுடரை பயன்படுத்துவது எப்படி?
ஆரஞ்சு தோல் தூளை சரும ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தும் வேறு சில பொருள்களுடன் சேர்த்து ஃபேஸ் பேக்காக தயார் செய்யலாம்.
முல்தானி மிட்டியுடன்
இந்த ஃபேஸ் பேக் தயார் செய்வதற்கு 1 டீஸ்பூன் முல்தானி மிட்டி மற்றும் 1 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர் போன்றவற்றில் ரோஸ் வாட்டரைச் சேர்க்கவும். இதை நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்தில் நன்கு தடவி, காய வைக்க வேண்டும். இது ஓரளவு காய்ந்த பிறகு கழுவி விடலாம். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் இரண்டையும் நீக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Ubtan: சருமத்தைப் பொலிவாக்கும் உப்டான். வீட்டிலேயே ஈஸியா இப்படி தயார் செய்யலாம்
சந்தன பவுடர் மற்றும் வால்நட் பவுடருடன்
ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனம் மற்றும் வால்நட் பொடியுடன், ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சுப் பொடியைச் சேர்த்து கலக்க வேண்டும். இதில் 2 முதல் 3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து பின் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டரைச் சேர்க்க வேண்டும். இந்த கலவையை சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சருமம் உலர்ந்த பிறகு ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம் அல்லது சிறிது கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்த வேண்டும்.

தேன் மற்றும் மஞ்சளுடன்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஆரஞ்சு தோல் பவுடர், மஞ்சள் மற்றும் இயற்கை தேன் போன்றவற்றை தனித்தனியே தலா 1 டீஸ்பூன் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கலந்து சிறந்த பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 5 முதல் 10 நிமிடம் வைத்துக் கொள்ளவும். பின் ஏதேனும் முகம் சுத்தப்படுத்தி அல்லது ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தவும். எனினும், முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ள சருமத்தில் இதைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Camphor Coconut Oil Benefits: சருமத்தை பளபளப்பாக தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்துகோங்க
தயிருடன் ஆரஞ்சு தோல் பவுடர்
1 டீஸ்பூன் அளவிலான ஆரஞ்சு தோல் பவுடரில் 2 டீஸ்பூன் அளவு தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாகக் கலக்கி, முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு வைக்கலாம். பின் சருமத்தைக் கழுவுவது தெளிவான, புத்துணர்ச்சியூட்டப்பட்ட மற்றும் இறுக்கமான தோற்றமுடைய சருமத்தைப் பெறலாம். சருமத்தை உடனடியாக புதுப்பிக்க இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.
எலுமிச்சையுடன் ஆரஞ்சு தோல் பவுடர்
இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய 2 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன், சில துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் 1 டீஸ்பூன் Fuller’s Earth மற்றும் 1 டீஸ்பூன் சந்தன பவுடர் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். இதை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து பிறகு கழுவ வேண்டும்.

ஆரஞ்சு தோல் பவுடர் கொண்டு தயார் செய்யப்படும் இந்த ஃபேஸ் பேக்குகள் சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Skin Tightening Face Pack: எந்த கறையும் இல்லாத சுத்தமான சருமத்தை பெற இந்த ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version