Homemade Face Masks With Raw Milk: கோடைக்காலம், குளிர்காலம் என எந்த காலத்திலும் சரும பராமரிப்பு அவசியமான ஒன்றாகும். அதிலும் கோடைக்காலத்தில் வெயிலின் காரணத்தால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் சூரியஒளிக் கதிர்களின் தாக்கத்தால் சருமத்தின் அழகு குறைந்து காணப்படும்.
சருமத்தின் அழகைப் பராமரிக்க வீட்டிலேயே உள்ள சில பொருள்களைப் பயன்படுத்தலாம். அந்த வகையில், சரும ஆரோக்கியத்தில் பச்சைப் பால் மிகவும் உதவுகிறது. பச்சைப்பால் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் கறைகளை நீக்கி பளபளப்பான நிறத்தைத் தரவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sunscreen Benefits: சன்ஸ்கிரீனை பயன்படுத்த சரியான வழி இது தான்! இதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சருமத்தை பளபளப்பாக்கும் பச்சைப்பால் ஃபேஸ்பேக்குகள்
காய்ச்சாத பாலுடன் சருமத்திற்கு நன்மை பயக்கும் பொருள்களைச் சேர்த்து ஃபேஸ் பேக்குகள் தயார் செய்யலாம். இதில் பச்சைப்பால் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகளைக் காணலாம்.
பச்சைப்பால் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
ஓட்ஸ் ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியன்ட் ஆகும். இதனுடன் பச்சைப்பால் சேர்ந்து பயன்படுத்துவது இறந்த செல்களை சருமத்திலிருந்து வெளியேற்றுகிறது. மேலும் இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தைத் தருகிறது. இந்த ஃபேஸ்பேக் தயார் செய்ய 1 டீஸ்பூன் நன்றாக அரைத்த ஓட்ஸ் உடன் 2 தேக்கரண்டி பச்சைப் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல முடிவுகளைப் பெற வாரம் இரு முறை இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.
கடலை மாவு மற்றும் பச்சைப்பால் ஃபேஸ் பேக்
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்க கடலை மாவு உதவுகிறது. இது இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. 1 தேக்கரண்டி கடலை மாவுடன், 2 தேக்கரண்டி பச்சைப் பால் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்துவது சருமத்திற்கு பிரகாசமான நிறத்தை அளிக்கிறது. இதை வாரந்தோறும் பயன்படுத்தலாம்.
பச்சைப்பால் மற்றும் அலோவேரா ஃபேஸ் பேக்
கற்றாழை இனிமையான பண்புகளைக் கொண்ட சிறந்த தாவரமாகும். பச்சைப்பாலுடன் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்துவதுடன், சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. 1 தேக்கரண்டி அலோவேரா ஜெல்லுடன் 2 தேக்கரண்டி அளவு பச்சைப்பால் சேர்த்து சருமத்தில் பயன்படுத்தலாம். இதை 20 நிமிடம் வைத்து பின் கழுவி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Multani Mitti For Skin: கண்ணாடி போல மினு மினு சருமத்திற்கு முல்தானி மிட்டியை இப்படி யூஸ் பண்ணுங்க
வெள்ளரி மற்றும் பச்சைப்பால் ஃபேஸ் பேக்
வெள்ளரி இனிமையான மற்றும் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டதாகும். இது சருமத்திற்கு சரியான தேர்வாக அமைகிறது. இதனைப் பயன்படுத்துவது எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்துவதுடன், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.
பச்சைப்பால் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்
பப்பாளியில் பப்பேன் என்ற என்சைம்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தை உரிந்து பிரகாசமாக வைக்கிறது. பச்சைப் பாலுடன் பப்பாளி சேர்த்து ஃபேஸ் பேக் தயார் செய்வது சருமத்தை மென்மையாகவும், பயனுள்ள தீர்வைத் தருவதாகவும் அமைகிறது. 2 தேக்கரண்டி பச்சைப்பால் மற்றும் 2 தேக்கரண்டி பழுத்த பப்பாளி கூழ் கலந்த இந்த ஃபேஸ்பேக்கை வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.
சந்தனம் மற்றும் பச்சைப்பால் ஃபேஸ் பேக்
சரும ஆரோக்கியத்திற்கு சந்தனம் சிறந்த தேர்வாக அமைகிறது. இது சிறந்த தோல் பராமரிப்பு மூலப்பொருளாகும். இவை சருமத்தை பிரகாசமாக வைப்பதுடன், அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. பச்சைப்பாலுடன், சந்தனம் கலந்த ஃபேஸ்பேக் பயன்படுத்துவது பொலிவான நிறத்தைப் பெற உதவுகிறது. இந்த ஃபேஸ்பேக் தயார் செய்ய 2 தேக்கரண்டி பச்சைப்பாலுடன் 1 தேக்கரண்டி சந்தன பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தி 15-20 நிமிடங்கள் வைத்து பின் கழுவி விடலாம். சிறந்த முடிவுகளைப் பெற வாரம் ஒரு முறை இந்த ஃபேஸ்பேக்கைப் பயன்படுத்தலாம்.
பச்சைப் பால் கொண்டு தயார் செய்யப்படும் இந்த ஃபேஸ் பேக்குகள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், அழகாக மற்றும் மென்மையாக வைக்க உதவுகிறது. எனினும், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Hydration Face Mask: கோடையில் சருமம் வறண்டு போகாம இருக்க இந்த ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik