Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Sunscreen Benefits: சன்ஸ்கிரீனை பயன்படுத்த சரியான வழி இது தான்! இதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

What Is The Correct Way To Apply Sunscreen: கோடைக்காலத்தில் சரும பராமரிப்பு மிகவும் கடினமானதாக இருக்கலாம். ஏனெனில் சரும எரிச்சல், அரிப்பு மற்றும் இன்னும் பல பிரச்சனைகளை இந்த காலகட்டத்திலேயே அதிகம் அனுபவிப்பர். இந்த காலத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாகும். இது எந்த வயதிலும் சருமத்தின் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க சிறந்த ஒன்றாகும். இதில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.

சன்ஸ்கிரீனை சரியாக பயன்படுத்துவது எப்படி?

  • வெளியில் செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். இது சருமம் சன்ஸ்கிரீனை உறிஞ்சி பாதுகாக்க சுமார் 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். சூரிய ஒளி இருக்கும் வரை சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமம் பாதுகாப்பற்றதாக இருக்கும்.
  • ஆடையால் மூடப்படாத சருமம் அனைத்திற்கும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம். அதன் படி, கழுத்து, முகம், கால்களின் மேல் மற்றும் கால்கள், காதுகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம். முதுகு போன்ற பகுதிகளில் தடவுவதற்கு சிரமமாக இருப்பின் ஸ்ப்ரே ஸ்கிரீன் பயன்படுத்தலாம் அல்லது வேறு நபரின் உதவி கொண்டு பயன்படுத்தலாம்.
  • 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF கொண்ட சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது நீர் எதிர்ப்புத் தன்மை கொண்டதாக அமைகிறது. அதாவது UVA மற்றும் UVB கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
  • போதுமான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான பெரியவர்களுக்கு சுமார் 1 அவுன்ஸ் தேவைப்படுகிறது அல்லது அவர்களின் உடலை முழுவதுமாக மறைக்க ஒரு ஷார் கிளாஸ் நிரப்ப போமானதாகும். பின் சன்ஸ்கிரீனை சருமத்தில் நன்றாக தேய்க்க வேண்டும்.
  • வெளியில் இருக்கும் போது பாதுகாப்பாக இருக்க, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Multani Mitti For Skin: கண்ணாடி போல மினு மினு சருமத்திற்கு முல்தானி மிட்டியை இப்படி யூஸ் பண்ணுங்க

சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதன் நன்மைகள்

  • இது சரும புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. ஏனெனில் இது சூரிய பாதுகாப்பிற்கான சிறந்த அணுகுமுறையாகும். அதிகப்படியான புற ஊதாக் கதிர்வீச்சு வெளிப்பாட்டால் பெரும்பாலான தோல் குறைபாடுகள் ஏற்படலாம்.
  • சன்ஸ்கிரீன்களில் உள்ள டைட்டானியம் டை ஆக்ஸைடு மற்றும் துத்தநாக ஆக்ஸைடு போன்ற தாதுக்கள், தோலை அடையும் முன் கதிர்களைத் தடுக்கின்றன. இந்த ஆபத்தான கதிர்வீச்சுக்களால் நிறமிகள், சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
  • கூடுதல் லைட்டிங் ஏஜெண்டுகள் தேவையில்லாமல், ஹைப்பர் பிக்மென்டேஷனின் வளர்ச்சியைக் குறைக்க சன்ஸ்கிரீன் உதவுகிறது. இது சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
  • சன்ஸ்கிரீனை அடிக்கடி பயன்படுத்துவது சருமத்திற்கு ஒளிரும் சருமத்தையும் அழகான நிறத்தையும் தருகிறது. மேலும் இது முதுமையின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hydration Face Mask: கோடையில் சருமம் வறண்டு போகாம இருக்க இந்த ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Mosambi For Face: பார்லர் போகாமல் முகம் பளபளப்பாக சாத்துகுடியை இப்படி பயன்படுத்துங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content