சோப்புலாம் வேணாம்! சருமம் தங்கம் போல ஜொலிக்க குளிக்கும் முன் கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க

How to apply aloe vera in summer: சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழை மிகுந்த நன்மை பயக்கும். இதில் கோடைக்காலத்தில் குளிக்கும் முன்பாக சருமத்திற்கு கற்றாழையைப் பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சோப்புலாம் வேணாம்! சருமம் தங்கம் போல ஜொலிக்க குளிக்கும் முன் கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க


How to apply aloe vera before bathing in summer: இன்று பலரும் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் சருமம் சார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள், வடுக்கள், மெல்லிய கோடுகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும், இதிலிருந்து விடுபட இயற்கையான வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன. இந்த வரிசையில் கற்றாழையும் அடங்கும். கற்றாழை ஒரு இயற்கை மருத்துவ தாவரமாகும். இது அதன் மருத்துவ குணங்கள் காரணமாக ஆயுர்வேதம் மற்றும் வீட்டு வைத்தியங்களில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.

இவை சருமத்தை இயற்கையான முறையில் குளிர்விக்கவும், ஊட்டமளிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் உதவுகிறது. கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இவை கோடைக்காலத்தில் ஏற்படும் பல சரும பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. ஏனெனில் கோடைக்காலத்திலேயே வலுவான சூரிய ஒளி, வியர்வை, மாசுபாடு மற்றும் தூசி காரணமாக, சருமத்தில் எரிச்சல், தடிப்புகள் மற்றும் ஒவ்வாமை போன்றவை ஏற்படுகிறது. இந்நிலையில், சருமத்திற்குக் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். இவை சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகிறது.

இதில் அர்பன் கிளாப்பில் பணிபுரியும் VLCC சான்றளிக்கப்பட்ட அழகுக்கலை நிபுணர் ஆஷு மாஸ்ஸி அவர்கள், கோடையில் குளிப்பதற்கு முன் கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: அரிப்பு, தடிப்பு பிரச்சனையால் அவதியா? அதிலிருந்து உடனே விடுபட இந்த ரெமிடிஸ் அப்ளை பண்ணுங்க

குளிப்பதற்கு முன் கற்றாழையை முகத்தில் எப்படி தடவுவது?

குளிப்பதற்கு முன் கற்றாழையைப் பயன்படுத்துவது நாள் முழுவதும் சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், இது பயன்படுத்துவதற்கு எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும். கற்றாழையை நேரடியாக சருமத்தில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும் அல்லது ஸ்க்ரப் அல்லது ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். இதை ஒரு ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது நன்மை பயக்கும். இதில் கோடையில் குளிப்பதற்கு முன்னதாக கற்றாழையைப் பயன்படுத்துவதற்கான 3 பயனுள்ள வழிகளைக் காணலாம்.

கற்றாழை மற்றும் முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்

கோடையில் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரு பழங்கால மருந்தாக முல்தானி மிட்டி விளங்குகிறது. இவை சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தி அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச உதவுகிறது. கற்றாழையுடன் முல்தானி மிட்டியைச் சேர்ப்பது சருமத்தை நச்சு நீக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய, 1 தேக்கரண்டி.முல்தானி மெட்டி, ஒன்றரை டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் தேவைக்கேற்ப ரோஸ் வாட்டரைச் சேர்த்து மென்மையான பேஸ்ட் செய்ய வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து முழுவதும் ஒரு பிரஷ் அல்லது கைகளால் தடவி 10–15 நிமிடங்கள் அல்லது அதை காயும் வரை வைத்து, இறுதியாக குளிர்ந்த நீரில் கழுவலாம்.

பயன்கள்

கற்றாழை மற்றும் முல்தானி மிட்டி பேக் ஆனது சூரிய ஒளியின் தாக்கத்தை நீக்கவும், சருமத்தை குளிர்விக்கவும் உதவுகிறது. மேலும் இது பருக்கள் மற்றும் தடிப்புகளைத் தடுக்கிறது. இது எண்ணெய் பசை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

காபி மற்றும் கற்றாழை ஃபேஸ் ஸ்க்ரப்

காபி குடிப்பதற்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கும் மிகுந்த நன்மை பயக்கும். இதை கற்றாழை ஜெல்லுடன் சேர்ப்பது, ஒரு சிறந்த இயற்கை ஸ்க்ரப்பாக மாறுகிறது.

பயன்படுத்தும் முறை

1 டீஸ்பூன் காபி பவுடரை ஒன்றரை டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். இதைக் குளிக்கும் முன் தடவி, 2-3 நிமிடங்கள் கைகளால் மசாஜ் செய்து, 15-20 நிமிடங்கள் வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: உங்க ஸ்கின் டல்லா இருக்கா.? இந்த 2 ஃபேஸ் பேக் போதும்.! தகதகன்னு மின்னுவீங்க.!

பயன்கள்

காபி மற்றும் கற்றாழை ஸ்க்ரப் பயன்படுத்துவது சருமத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளை நீக்கி, நிவாரணத்தைத் தருகிறது. மேலும் இது சருமத்தை மென்மையாக்குகிறது. சருமம் உணர்திறன் மிக்கது என்பதால், சிறிய அளவில் காபியை எடுத்து, முதலில் பேட்ச் டெஸ்ட் செய்து அதன் பின்னர் பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல்லில் மசாஜ் செய்வது

இது எளிதான வழியாகும். கோடையில் கற்றாழை ஜெல்லைக் கொண்டு சருமத்தில் லேசான மசாஜ் செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

பயன்படுத்தும் முறை

ஒரு டீஸ்பூன் புதிய கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அதைக் குளிப்பதற்கு முன் முகம் மற்றும் கழுத்தில் தடவி 3-5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் விட்டு, பின்னர் கழுவலாம்.

பயன்கள்

கற்றாழை ஜெல்லை கொண்டு மசாஜ் செய்வது சருமத்திற்குக் குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் இது எரிச்சல் மற்றும் வியர்வை நாற்றத்திலிருந்து நிவாரணம் தருகிறது. சருமத்தை ஈரப்பதாக்குவதன் மூலம் ஒவ்வாமை, தடிப்புகளிலிருந்து விடுபட வைக்கிறது. கற்றாழை ஜெல்லை குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்வித்து பயன்படுத்துவது குளிர்ச்சியான விளைவைத் தரும்.

முடிவு

கோடைக்காலத்தில் சருமத்திற்கு கற்றாழை பயன்படுத்துவது ஒரு சிறந்த தேர்வாகும். இது குளிர்ச்சியைத் தருவதுடன் சருமத்திற்கு ஊட்டமளித்து, சுத்தப்படுத்தி, இயற்கையான பளபளப்பைத் தருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள வழிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சருமத் தேவைகளுக்கு ஏற்றவையாகும். எனவே உங்கள் சரும வகை மற்றும் நேரத்திற்கு ஏற்ப இந்த வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை முயற்சிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வீட்டிலேயே பார்லர் போன்ற ஃபேஷியல் செய்ய விரும்பினால்.. இந்த விஷயங்களைப் பயன்படுத்துங்கள்..

Image Source: Freepik

Read Next

ஒற்றைத் தலைவலியை நொடியில் போக்க உதவும் பெப்பர்மின்ட் ஆயில்.. இப்படி யூஸ் பண்ணுங்க

Disclaimer