$
How to use aloe vera to prevent hair fall: இன்றைய மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். போதிய பராமரிப்பு இல்லாதது, ஊட்டச்சத்து இல்லாமை போன்ற காரணங்களால் முடி வறட்சி, பொடுகு, நுனிமுடி பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழலாம். அந்த வகையில் முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாம் பல்வேறு இயற்கையான வைத்தியங்களைக் கையாளலாம்.
அந்த வகையில் முடி ஆரோக்கியத்திற்கு கற்றாழை மிகவும் சிறந்த தேர்வாக அமைகிறது. கற்றாழையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் சருமம், முடி பராமரிப்புக்காக பிரபலமாக அறியப்படும் மூலிகையாகும். கற்றாழையின் அமைதியான தன்மை மற்றும் வளமான ஊட்டச்சத்து விவரங்கள், முடி உதிர்தலைக் குறைக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் தலைமுடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் கற்றாழை பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Natural Hair Oil: முடி கொட்டும் கவலை இனி வேண்டாம்.. இயற்கை முறை தீர்வு இதோ!
கற்றாழையின் ஊட்டச்சத்துக்கள்
கற்றாழை பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ போன்றவை ஆரோக்கியமான செல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடிக்கு பிரகாசத்தையும் தருகிறது. மேலும் இதன் ஃபோலிக் அமிலம் முடி வளர்ச்சிக்கும், முடியை பழுதுபார்க்கவும் உதவுகிறது. இது தவிர, கற்றாழையில் நிறைந்துள்ள என்சைம்கள் உச்சந்தலையில் இருந்து இறந்த சரும் செல்களை நீக்க உதவுகிறது. மேலும் இது சிறந்த சுழற்சியை ஊக்குவிக்கிறது. கூடுதலாக கற்றாழையின் புரோட்டியோலிடிக் என்சைம்கள் முடியை சரி செய்து பலப்படுத்துகிறது. இதில் முடி உதிர்தலுக்கு கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து காணலாம்.

முடி உதிர்வைத் தடுக்க கற்றாழையை பயன்படுத்தும் முறைகள்
முடிக்கு கற்றாழை ஜெல்லை நேரடியாக பயன்படுத்தலாமா?
கற்றாழையைப் பயன்படுத்துவதற்கான மிக எளிய வழியாக அமைவது புதிய கற்றாழை ஜெல்லை அப்படியே நேரடியாக உச்சந்தலையில் தடவுவதாகும். இதற்கு புதிய கற்றாழை இலையை எடுத்துக் கொண்டு, அதன் ஜெல்லை கரண்டியால் எடுக்க வேண்டும். இதை முடி மற்றும் உச்சந்தலையில் சமமாக நேரடியாகப் பயன்படுத்தலாம். பின் இதை 30 நிமிடங்கள் வைத்து லேசான ஷாம்பு கொண்டு கழுவலாம். எனவே சிறந்த பலனைப் பெற வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.
தேன் மற்றும் கற்றாழை
தேன் ஒரு ஈரப்பதத்தைத் தரக்கூடிய சிறந்த இயற்கைத் தேர்வாகும். இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு தேன்-1 டேபிள் ஸ்பூன், கற்றாழை ஜெல்-2 டேபிள்ஸ்பூன் எடுத்து, அதை ஒரு கிண்ணத்தில் மென்மையான வரை கலக்க வேண்டும். இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலை முழுவதும் தடவ வேண்டும். இதை 30 நிமிடங்கள் வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே இந்த எண்ணெய்யை தயாரித்து பயன்படுத்துங்கள்
தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை ஜெல்
தேங்காய் எண்ணெய் ஈரப்பதமூட்டும் தன்மை கொண்டதாகும். இதனுடன் கற்றாழை சேர்ப்பது முடியை வலுப்படுத்துகிறது. இந்த மாஸ்க் தயார் செய்வதற்கு, 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். இவை இரண்டையும் ஒரு பாத்திரம் ஒன்றில் சேர்த்து சிறிது சூடாக வேண்டும். பிறகு இதை குளிர்வித்து உச்சந்தலையில் இருந்து தொடங்கி தலைமுடியில் தேய்க்க வேண்டும். இதை உச்சந்தலையில் 1-2 மணி நேரம் வைத்து பிறகு ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

அத்தியாவசிய எண்ணெயுடன் அலோவேரா ஜூல்
இந்த மாஸ்க் தயார் செய்ய, ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெயைத் தேர்வு செய்யலாம். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைக் குறைக்கவும் உதவுகிறது. இதற்கு 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லுடன், 3 சொட்டு தேவையான அத்தியாவசிய எண்ணெயைச் சேர்க்க வேண்டும். இந்த கரைசலை உச்சந்தலையில் மெதுவாக தேய்க்க வேண்டும். இதை 30 முதல் 60 நிமிடங்கள் வரை வைத்து பிறகு கழுவலாம். இதை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
இவ்வாறு கற்றாழையை பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதன் முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Aloevera For Dandruff: தீராத பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட கற்றாழையுடன் இந்த பொருள் சேர்த்துக்கோங்க
Image Source: Freepik