முடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே இந்த எண்ணெய்யை தயாரித்து பயன்படுத்துங்கள்

  • SHARE
  • FOLLOW
முடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே இந்த எண்ணெய்யை தயாரித்து பயன்படுத்துங்கள்


கூந்தலுக்கு எண்ணெயை விட சிறந்தது எதுவுமில்லை. அதனால்தான் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டும் என்று காலம் காலமாக கூறப்படுகிறது. இன்று வீட்டிலேயே முடி உதிர்வை தவிர்க்கு ஸ்பெஷல் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Fall In Men: ஆண்களின் தலைமுடி உதிர்வதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

கறிவேப்பிலை எண்ணெய்

கறிவேப்பிலை எண்ணெய் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். வீட்டிலும் எளிதாக செய்யலாம். இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் முடி உதிர்வு கணிசமாக குறையும்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் - 4-5 டீஸ்பூன்.
கறிவேப்பிலை - 1 கைப்பிடி.

செய்முறை :

  • ஒரு கடாயில் 4-5 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
  • ஒரு நிமிடம் கழித்து அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை சேர்க்கவும்.
  • எண்ணெய் நன்றாக கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து எண்ணெயின் நிறம் மாற ஆரம்பிக்கும்.
  • இப்போது அடுப்பை அணைத்து எண்ணெயை ஆற வைக்கவும்.
  • முறையாக தயாரித்த ஆயிலை கண்ணாடி பாட்டிலில் நிரப்பவும்.

எப்படி உபயோகிப்பது?

சாதாரண எண்ணெய்க்குப் பதிலாக இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

தலைக்கு குளிப்பதற்கு முன் அல்லது வாரத்திற்கு 2-3 முறை இந்த எண்ணெயைப் பயன்படுத்தவும்.

முடி வேர் மற்றும் உச்சந்தலையில் எண்ணெய் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

பின்னர் குளிர்ந்த நீர் மற்றும் ஷாம்பு வைத்து தலையை அலசவும்.

இந்த பதிவும் உதவலாம் : Thick Hair Tips : மெலிந்த தலைமுடியை அடர்த்தியாக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!

செம்பருத்திப் பூ எண்ணெய் :

செம்பருத்திப் பூ கூந்தலுக்கு ஒரு வரப்பிரசாதம். முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்க இதை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் :

செம்பருத்தி மலர்கள் - 5.
தேங்காய் எண்ணெய் - 4-5 டீஸ்பூன்.

செய்முறை :

  • முதலில் செம்பருத்திப் பூவை நன்றாகக் கழுவினால், அதில் படிந்திருக்கும் அழுக்குகள் சுத்தமாகிவிடும்.
  • இப்போது பூவை மிக்ஸியில் போட்டு அரைத்தால், அது பேஸ்ட் ஆகிவிடும்.
  • ஒரு கடாயில் 4-5 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
  • இப்போது இந்த எண்ணெயில் செம்பருத்தி பூ விழுதை சேர்க்கவும்.
  • சிறிது நேரம் எண்ணெய் கொதிக்க விடவும்.
  • இப்போது அடுப்பை அனைத்து, எண்ணெய்யை ஆறவைக்கவும்.
  • பின் ஒரு சல்லடையின் உதவியுடன் எண்ணெயை வடிகட்டி, சுத்தமான பாட்டிலில் சேமிக்கவும்.

எப்படி உபயோகிப்பது?

குளிப்பதற்கு முன், இந்த எண்ணெயை தலைமுடியில் நன்கு தடவி மசாஜ் செய்யவும்.
அரை மணி நேரம் தலைமுடியில் எண்ணெயை அப்படியே விடவும்.
பின்னர், மென்மையான ஷாம்பு கொண்டு தலை முடியை கழுவவும்.

முடி பராமரிப்பு குறிப்பு

கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஹேர் வாஷ் அவசியம். வாரத்திற்கு இரண்டு முறையாவது முடியைக் கழுவவும். முடியில் அழுக்கு இருந்தாலும் முடி உதிர ஆரமிக்கும்.

தலைமுடிக்கு எண்ணெய் தடவ மறக்காதீர்கள். எண்ணெய் தடவுவதன் மூலம் கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். எண்ணெய் தடவுவதால் கூந்தல் வலுப்பெறுவதோடு முடி உடையாது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் தலைமுடிக்கு நன்மை பயக்கும். ஹேர் மாஸ்க் உங்கள் முடியின் நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Image Credit: freepik

Read Next

Hair Growth Remedy : ஒரே மாதத்தில் முடி இடுப்புவரை நீளமாக வளர இதை செய்தால் போதும்!

Disclaimer

குறிச்சொற்கள்