Thu Oct 29, 2026 | 12:53 PM IST

Thick Hair Tips : மெலிந்த தலைமுடியை அடர்த்தியாக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!

Thick Hair Tips : மெலிந்த தலைமுடியை அடர்த்தியாக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!Thick Hair Tips : மெலிந்த தலைமுடியை அடர்த்தியாக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!

how to get thicker hair for female : ஒவ்வொரு பெண்ணும் தனது தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு. இதற்காக, அவர்கள் அனைத்து செயல்முறைகளையும் முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் பல நேரங்களில் நமக்கு சாதகமான முடிவை தராது. இதற்குக் காரணம் உங்கள் தினசரி வழக்கத்தை மாற்றுவதுதான்.

ஏனென்றால், நமக்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே தலைமுடியை பராமரிப்போம், நேரமில்லாத போது அவற்றை அப்படியே விட்டுவிடுவோம். அதுமட்டும் அல்ல, வானிலை மாற்றமும் தமது தலைமுடியை பாதிக்கும். உங்கள் முடி மெல்லியதாக இருக்க விரும்பவில்லை என்றால், அவற்றை அடர்த்தியாக மாற்ற இந்த முறைகளை முயற்சி செய்யுங்கள். இயற்கையாகவே உங்கள் தலைமுடி அடர்த்தியாக மாறும்.

இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான முடி வேண்டுமா? இந்த 7 ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்களேன்!

வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ்

ஒவ்வொரு பெண்ணும் விரும்புவது அடர்த்தியான மற்றும் நீளமான முடி. ஆனால், எந்த முயற்சியும் எடுக்காமல் அடர்த்தியான முடியை பெறுவது சாத்தியமில்லை. ஏனெனில் முடிக்கும் முழுமையான பராமரிப்பு தேவை. அப்போதுதான் அது சரியாக வளர துவங்கும். எனவே, வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் தலைமுடியில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்.

இதற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்துவதன் மூலம், முடி நீளமாக வளரும், உச்சந்தலையில் ஊட்டச்சத்தும் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் தலைமுடியை சரியாக சிக்கு எடுக்கவும். அதன் பிறகு, முடிக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம் : இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!

உங்கள் தலைமுடியை சுமார் 30 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் தலைமுடியை சிறிது நேரம் அப்படியே விடவும். பின்னர், ஷாம்பு கொண்டு முடியை சுத்தம் செய்யவும். வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்தால் மட்டுமே முடி அடர்த்தியாக இருக்கும்.

ஹேர் பேக் அப்ளை செய்யவும்

சந்தையில் பல வகையான ஹேர் பேக்குகள் உள்ளது. உங்களின் நம்பிக்கைக்கூறிய ஹேர் பேக்கை தேர்வு செய்து நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால், வீட்டிலேயே ஹேர் பேக் தயார் செய்து தலைமுடிக்கு தடவுவது மிகவும் நல்லது. இதன் காரணமாக, உங்கள் தலைமுடியில் எந்தவிதமான ரசாயனமும் பயன்படுத்தப்படாது, அதே போல் உங்கள் பணமும் மிச்சமாகும்.

ஹேர் பேக் செய்ய கற்றாழை மற்றும் வெந்தய விதைகளை சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை நன்றாக கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும். இதை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடி அடர்த்தியாக மாறும். அதே நேரத்தில், முடி உதிர்தல் குறைவாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : அடர்த்தியான முடியை கட்டுப்படுத்த சில வழிகள்!

மெல்லிய முடிக்கு ஆம்லா ஷாம்பு

நெல்லிக்காய் மெல்லிய முடியை அடர்த்தியாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியை நன்றாகப் பராமரிக்கலாம். ஏனெனில், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். அதனால்தான் உங்கள் தலைமுடிக்கு ஆம்லா ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். இதுவும் உங்கள் முடியை பலப்படுத்தும்.

குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் சோதனை செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் முடி அமைப்பும் வித்தியாசமானது. எனவே, மேலே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உடனடி பலன்களைத் தரும் என்று நாங்கள் கூறவில்லை. நீங்கள் ஒருமுறை உங்கள் நிபுணரிடம் ஆலோசித்து, பின்னர் அவற்றைப் பயன்படுத்தலாம்.

Image Credit: Freepik

Read Next

→ முடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே இந்த எண்ணெய்யை தயாரித்து பயன்படுத்துங்கள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.