Home remedies for healthy hair: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். பெரும்பாலும் முடி உதிர்வு, முடி உடைதல், இளம் வயதில் நரை முடி மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்நிலையில், இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட சிலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களை நாடுகின்றனர்.
ஆனால், இதில் இரசாயனங்கள் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதால் இது முடி ஆரோக்கியத்திற்கு கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே, முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட நாம் சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். இதில் ஆரோக்கியமான முடி மற்றும் உச்சந்தலைக்கு நாம் பயன்படுத்த வேண்டிய சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla For Hair: பொடுகுத் தொல்லை நீங்க நெல்லிக்காயுடன் இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க
முடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்க உதவும் வீட்டு வைத்தியம்
ஆம்லா
இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லா வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. இவை உச்சந்தலையில் சுழற்சியை மேம்படுத்தவும், மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது காலப்போக்கில் தலைமுடிக்கு இயற்கையாகவே கருமை நிறத்தை அளிக்கிறது. இதற்கு புதிய ஆம்லா சாற்றை நேரடியாக உச்சந்தலையில் தடவலாம் அல்லது நெல்லிக்காய் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யலாம். இதை 30 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவலாம்.
வெங்காய சாறு
உணவுப்பொருளான வெங்காயம் முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. வெங்காய சாறு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வை தடுக்கும் திறனுக்காகவும் நன்கு அறியப்படுகிறது. இதை தலைமுடியில் தேய்ப்பது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. மேலும், முடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆய்வு ஒன்றில், வெங்காய எண்ணெயை அடிக்கடி பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, வெங்காய சாறு ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும்.
இதற்கு முதலில் வெங்காயத்தை எடுத்து அதை சாறாக வடிகட்டி பிறகு உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை 15-20 நிமிடங்கள் வைத்து பின்னர் லேசான ஷாம்பூ கொண்டு தலைமுடியைக் கழுவலாம்.
ரோஸ்மேரி எண்ணெய்
ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த வீட்டு வைத்தியங்களில் ரோஸ்மேரி எண்ணெயும் ஒன்றாகும். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது புதிய முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், முடி உதிர்வைத் தடுப்பதற்கும் உதவுகிறது. இவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது மயிர்க்கால்கள் வலுவாக இருப்பதை ஊக்குவிக்கிறது. எனவே தலைமுடிக்கு ரோஸ்மேரி எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடிக்கு முழுமையான, அதிக அளவு தோற்றத்தைப் பெறலாம்.
தலைமுடிக்கு சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயில் கலந்து உச்சந்தலையில் சில நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். இதை 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை அப்படியே வைத்து, பிறகு வழக்கம் போல் தலைமுடியைக் கழுவி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உங்க சீப்பை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யணும் தெரியுமா?
கற்றாழை ஜெல்
கற்றாழை ஆனது அதன் இனிமையான மற்றும் குணப்படுத்தும் பண்புகளுக்காக, பல நூற்றாண்டுகளாகவே நன்கு அறியப்படும் ஒன்றாகும். ஆய்வு ஒன்றில், கற்றாழை ஜெல்லை தலைமுடிக்கு தடவுவது உச்சந்தலையைச் சுத்தப்படுத்தவும், அதிகப்படியான எண்ணெயை அகற்றவும், பொடுகு அபாயத்தைக் குறைக்கவும், பளபளப்பான, மென்மையான கூந்தலைப் பெறவும் வழிவகுக்கிறது.
இது ஆரோக்கியமான கூந்தலுக்கான மிகவும் பிரபலமான வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் மற்றும் ஹைட்ரேட் செய்யும் திறன் கொண்டதாகும். இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை பிரித்தெடுத்து, அதை நேரடியாக உச்சந்தலையில் தடவி, சுமார் 30 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வெந்தய விதைகள்
இந்த விதைகள் ஆரோக்கியமான கூந்தலுக்கு பயன்படுத்தக் கூடிய எளிதான வீட்டு வைத்தியமாகும். வெந்தய விதைகளில் புரதம், நிகோடினிக் அமிலம் மற்றும் லெசித்தின் போன்றவை நிறைந்துள்ளது. இவை முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் உதவுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவது பொடுகுத் தொல்லையைக் குறைப்பதுடன், மென்மையான மற்றும் வலிமையான முடியைத் தருகிறது. தலைமுடிக்கு வெந்தயத்தை பயன்படுத்த முதலில் அதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு காலையில் விதைகளிலிருந்து தண்ணீரைப் பிரித்து, தண்ணீரை சூடாக்க வேண்டும். அதன் பின்னர், தண்ணீரை குளிர்வித்து அதை முடிக்கு பயன்படுத்தலாம். இதை உச்சந்தலையில் 3-4 நிமிடங்கள் மசாஜ் செய்து, அரை மணி நேரம் வைத்து பிறகு கழுவி விடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Biotin for hair growth: வேகமாக, இயற்கையாக முடி வளரணுமா? இந்த ஒரு வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கோங்க
Image Source: Freepik