How To Make Amla And Honey Hair Mask At Home: தலைமுடி வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு, இன்று பலரும் ரசாயனங்கள் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவது முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க கூந்தலில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது அவசியமாகும். இவை முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், சேதத்திலிருந்து முடியைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
அந்த வகையில் முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் இயற்கையான பொருள்களில் ஆம்லா மற்றும் தேன் இரண்டுமே அடங்கும். இவை இரண்டுமே முடி ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது. இதன் பயன்பாடு முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், முடி உடைதல் மற்றும் பொடுகு போன்றவற்றைத் தவிர்க்கவும் உதவுகிறது. இதில் கூந்தலுக்கு நெல்லிக்காய் மற்றும் தேன் பயன்படுத்துவதன் நன்மைகள் மற்றும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Banana Hair Mask: சுருள் முடிபிரச்சனைக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க
நெல்லிக்காய் மற்றும் தேன் ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதன் நன்மைகள்
தலைமுடிக்கு தேன் மற்றும் ஆம்லா ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்.
உச்சந்தலை தொற்றைத் தவிர்க்க
முடி மற்றும் உச்சந்தலையில் தொற்றுக்களைத் தவிர்க்க நெல்லிக்காய் மற்றும் தேன் ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். இதில் ஆம்லா மற்றும் தேனில் உள்ள பண்புகள், உச்சந்தலை நோய்த்தொற்றை நீக்குவதுடன், முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உலர்ந்த முடி பிரச்சனைக்கு
முடி வறட்சி அல்லது வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் முடியை சரியாக பராமரிக்காததால் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, தேன் மற்றும் நெல்லிக்காயில் செய்யப்பட்ட ஹேர்மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.
முடி உதிர்வு பிரச்சனைக்கு
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முடி உதிர்தல் பிரச்சனையைச் சந்திக்கின்றனர். நெல்லிக்காய் மற்றும் தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் முடி உதிர்வைத் தடுக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள பண்புகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இதன் மூலம் முதுமை சார்ந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Hair Mask: முடி அதிகமா உதிருதா? இந்த ஹேர்பேக்குகள் யூஸ் பண்ணுங்க
பொடுகு பிரச்சனையைக் குறைக்க
தலைமுடி மற்றும் உச்சந்தலையில் அழுக்கு குவிவது பொடுகு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக நரைமுடி சார்ந்த் பிரச்சனைகளும், முடி உதிர்தல் பிரச்சனையும் ஏற்படலாம். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, தேன் மற்றும் நெல்லிக்காயில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
தேன் மற்றும் ஆம்லா ஹேர்மாஸ்க் செய்வது எப்படி?
- நெல்லிக்காய் மற்றும் ஆம்லா ஹேர் மாஸ்க் தலைமுடியை வலுவாக, அடர்த்தியாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
- நெல்லிக்காய் பவுடர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க் செய்முறை குறித்துக் காணலாம்.
- இதற்கு இரண்டு ஸ்பூன் ஆம்லா பொடியை எடுத்து, அதில் வெதுவெதுப்பான நீர் மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.
- இதை நன்கு கலந்த பிறகு, இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவ வேண்டும்.
- இந்தக் கலவையை முடிக்கு அப்ளை செய்த பிறகு, 30 நிமிட அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தி வந்தால் பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Egg Hair Mask: முடி வறட்சி, முடி கொட்டும் பிரச்சனையா? இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க.
Image Source: Freepik