$
Egg Hair Mask For Hair Growth: தலைமுடி வலுவாக மற்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாகும். இதனால், பலரும் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பல்வேறு பொருள்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை விலை உயர்ந்ததாகவோ, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகவோ இருக்கலாம். இவற்றைத் தவிர்க்க, வீட்டிலேயே எளிதான முறையில் ஹேர் மாஸ்க் தயார் செய்து பயன்படுத்தி முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதற்கு முட்டையைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் செய்யலாம்.
ஏன் முட்டை ஹேர்மாஸ்க்
முட்டை புரதச்சத்து நிறைந்த உணவாகும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. முட்டையில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளன. மேலும் முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீன்கள் முடி சேதமடைவதைத் தடுக்கிறது. முட்டையின் மஞ்சள் பகுதியில் உள்ள லெசித்தின், முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
குறிப்பாக குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று காரணமாக பொலிவு குறைந்து முடி உதிர்வது அதிகமாகி முடியை சேதமடையச் செய்யலாம். இந்த சூழ்நிலையில் முடி பராமரிப்பிற்கு முட்டையில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். முடி பராமரிப்பிற்கு உதவும் முட்டை ஹேர் மாஸ்க் தயாரிப்பது எப்படி என்பது குறித்துக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves For Hair: கறிவேப்பிலையை இப்படி யூஸ் பண்ணா இந்த முடி பிரச்சனை எதுவும் வராதாம்.
முடி பராமரிப்புக்கு முட்டை ஹேர் மாஸ்க் தயாரிப்பது எப்படி
முட்டையுடன் முடி ஆரோக்கியத்திற்கு உதவும் மற்ற சில பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் முடியைப் பொலிவாக வைத்திருக்கலாம்.
முட்டை மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்
தேவையான பொருள்கள்
- முட்டை - 1
- கற்றாழை ஜெல் - 4 முதல் 5 தேக்கரண்டி
- ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
முட்டை மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க் செய்யும் முறை
- இந்த ஹேர் மாஸ்க் செய்ய, மேலே கொடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் நன்றாக கலந்து கெட்டியான பேஸ்ட் தயார் செய்ய வேண்டும்.
- இந்த பேஸ்ட்டை முடி மற்றும் வேர்களில் 1/2 மணி நேரம் தடவ வேண்டும்.
- அதன் பிறகு, ஷாம்பு கொண்டு முடியைக் கழுவலாம்.
- இந்த ஹேர் மாஸ்க் செய்வது முடியை மென்மையாக மற்றும் பளபளப்பாக மாற்றுகிறது மற்றும் முடி உதிர்வைத் தடுக்கிறது.
முட்டை மற்றும் தயிர் ஹேர் மாஸ்
தேவையானவை
- முட்டை - 1
- தயிர் - 2 ஸ்பூன்
- எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
முட்டை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க் செய்யும் முறை
- இந்த ஹேர் மாஸ்க்கிற்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் கலந்து கலவையைத் தயார் செய்ய வேண்டும்.
- பின், இந்த கலவையை முடி, வேர்களில் தடவி 1 மணி நேரம் வைக்க வேண்டும்.
- அதன் பிறகு லேசான ஷாம்பு கொண்டு முடியைக் கழுவலாம். இது முடி உதிர்வைக் குறைத்து, பளபளப்பாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Vetrilai For Hair: வெறித்தனமா முடி வளரணுமா? வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க போதும்
முட்டை மற்றும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்
தேவையானவை
- முட்டை - 1
- மசித்த வாழைப்பழம்- 1
- பால் - 2 தேக்கரண்டி
- தேன் - 1 தேக்கரண்டி
- ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
- இந்த ஹேர் மாஸ்க் தயாரிக்க, இந்த பொருள்கள் அனைத்தையும் கலந்து பேஸ்ட்டாகத் தயார் செய்யவும்.
- இந்த பேஸ்ட்டை முடி மற்றும் வேர்களில் தடவ வேண்டும்.
- இவ்வாறு 1 மணி நேரம் வைத்து பின் லேசான ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.
- இந்த மாஸ்க் முடியை பளபளப்பாக வைப்பதுடன், முடியை வலுவாக்குகிறது.
முட்டையில் செய்யப்பட்ட இந்த ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம். எனினும், இதனைத் தடவும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: கரு கரு கூந்தலைப் பெற ஆம்லா உடன் இந்த ஒரு பொருளைச் சேர்த்து பயன்படுத்துங்க.