Ways To Use Curry Leaves For Hair: உணவுப் பொருளாக பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு முடி பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள், பீட்டா கரோட்டின், நல்ல அளவிலான புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இது முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது.
கறிவேப்பிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கம் பல வகையான முடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று முடி உதிர்தல் ஆகும். மாறிவரும் பருவ காலத்தில் முடி பிரச்சனைகளைப் போக்க கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். இதில் தலைமுடிக்கு கறிவேப்பிலை பயன்படுத்தும் முறை மற்றும் பயன்கள் குறித்துக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mustard Oil For Hair: கரு கரு முடிக்கு கடுகு எண்ணெயுடன் இந்த 3 பொருள்களை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க.
முடி பிரச்சனை நீங்க கறிவேப்பிலை தரும் நன்மைகள்
- கறிவேப்பிலையைப் பயன்படுத்துவது தலைமுடியில் ஏற்படும் முடி வறட்சி மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவற்றை நீக்க உதவுகிறது.
- பருவகாலம் மாறும் போது உச்சந்தலையில் அரிப்பு மற்றும் சொறி பிரச்சனை ஏற்படலாம். இந்த பிரச்சனையைத் தீர்க்க கறிவேப்பிலை உதவுகிறது.
- கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதன் மூலம் முடி வறட்சி மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கலாம்.
- கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குளிர்ந்த காற்றினால் ஏற்படும் வறட்சியில் இருந்து முடியைப் பாதுகாக்கிறது.
- இதில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது.
- வானிலை மாற்றத்தால் சிலருக்கு முடி பிளவு ஏற்படலாம். கறிவேப்பிலையைத் தொடர்ந்து பயன்படுத்துதன் மூலம் இந்த முடி பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

தலைமுடிக்கு கறிவேப்பிலை பயன்படுத்தும் முறை
கறிவேப்பிலையை தலைமுடியில் தடவ பல வழிகள் உள்ளன.
- முதலில் கறிவேப்பிலையை கழுவி, அரைத்து, பேஸ்ட் தயார் செய்ய வேண்டும்.
- இந்த பேஸ்ட்டை முடி மற்றும் உச்சந்தலையில் தடவிக் கொள்ள வேண்டும்.
- இது தவிர, தேங்காய் எண்ணெயில் 25 முதல் 30 கறிவேப்பிலை போட்டு காய்ச்ச வேண்டும்.
- இலைகளின் சாறு எண்ணெயுடன் கலந்த பிறகு வடிகட்டி எண்ணெயைப் பிரிக்க வேண்டும்.
- கறிவேப்பிலையை பொடியாக அரைத்து, அதனுடன் நெல்லிக்காய் பொடியை கலந்து பேஸ்ட் தயார் செய்ய வேண்டும்.
- இந்தக் கலவையை கூந்தலில் தடவி வர முடி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Split Ends Removing Tips: நுனி முடி பிளவில் இருந்து விடுபட இந்த டிப்ஸ ஃபாலோப் பண்ணுங்க.
ஆரோக்கியமான கூந்தலுக்கு கறிவேப்பிலை சேர்க்கும் முறை
கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- காலை நேரத்தில் 4 முதல் 5 கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
- சாலட் அல்லது காய்கறிகளிலும் கறிவேப்பிலையை சேர்க்கலாம்.
- கறிவேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து கஷாயம் தயாரிக்க வேண்டும். இந்த கஷாயத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை உட்கொள்ளலாம்.

இந்த வகைகளில் கறிவேப்பிலையைப் பயன்படுத்தி, முடி உதிர்வு, பொடுகு, முடி வறட்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Guava Leaves For Black Hair: வெள்ளை முடி கருப்பாக மாற கொய்யா இலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்துங்க.
Image Source: Freepik