Ways To Use Guava Leaves For Hair: இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினரும் நரைமுடி பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். உண்மையின் நரைமுடி வயதாவதற்கான முக்கிய அறிகுறியாகும். இந்நிலையில் சிறு வயதிலேயே எதிர்கொள்ளும் இந்த நரைமுடி பிரச்சனைக்கு பலரும் பல தீர்வுகளைத் தேடி வருகின்றனர். ஆனால், முடி ஏன் நரைக்கிறது என்பதை அறிந்ததுண்டா? முடி நரைப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
முதுமை காரணத்தைத் தவிர்த்து நரைமுடி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம். இது தவிர தலைமுடிக்கு எண்ணெய் தடவாமல் இருப்பது, முடியை போதுமான அளவு பராமரிக்காமல் இருத்தல், தவறான முடி பராமரிப்பு பொருள்களை உபயோகித்தல் அல்லது சில மருந்துகளை உட்கொள்ளுதல் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் முடி முன்கூட்டியே நரைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Clove Water Hair Benefits: பொடுகுத் தொல்லையை நீக்கும் கிராம்பு நீர். இப்படி பயன்படுத்துங்க.
நரைமுடி நீங்க வீட்டு வைத்தியம்
இளம் வயதிலேயே ஏற்படும் இந்த நரைமுடி பிரச்சனையைச் சரி செய்ய எளிய வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம். இதன் மூலம் எளிதாக வெள்ளை முடி பிரச்சனையிலிருந்து விடுபடலாம். அந்த வகையில் கொய்யா இலை பயன்பாடு முடியை கருப்பாக மாற்ற உதவுகிறது.கொய்யா இலையுடன் கற்றாழையை சேர்த்து தலைமுடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இயற்கையான தலைமுடியைப் பெறலாம்.
இதற்கு மாற்றாக, சந்தையில் விற்பனை செய்யப்படும் சாயங்கள் மற்றும் முடி நிறங்களைப் பயன்படுத்துவது தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே இயற்கையான வழியில் எளிதாக தலைமுடியை கருமையாக மாற்ற கொய்யா இலை மற்றும் கற்றாழையை பயன்படுத்தலாம். இதில் கொய்யா இலை மற்றும் கற்றாழையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இதில் காண்போம்.
முடி கருமையாக கொய்யா மற்றும் கற்றாழை பயன்படுத்தும் முறை
பொதுவாக கொய்யா பழங்களுடன் ஒப்பிடுகையில் கொய்யா இலையிலேயே அதிக அளவிலான மற்றும் சத்தான ஊட்டசத்துக்கள் காணப்படுகிறது. அதே போல, கற்றாழையில் உள்ள பல்வேறு மருத்துவ குணங்கள் முடி தொடர்பான பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. இந்த இரண்டு பொருள்களும் தலைமுடியை கருப்பாக்குவதில் பல வழிகளில் நன்மை தருகிறது. எனவே வெள்ளை முடியை கருமையாக மாற்ற பின்வரும் முறையில் இந்த இரண்டு பொருள்களையும் கலந்து தலைமுடியில் தடவலாம்.
- முதலில் கொய்யா இலைகளை 8 முதல் 10 வரை எடுத்துக் கொண்டு அதை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் இதை அரைத்து நன்றாக பேஸ்ட் செய்ய வேண்டும்.
- பின் பாத்திரம் ஒன்றில் கொய்யா இலை விழுதின் சம அளவு கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும். இதில் ஏதேனும் ஹேர் ஆயில் கலந்து கொள்ளலாம்.
- இவை அனைத்தையும் நன்றாகக் கலக்க வேண்டும்.
- இந்த கலவையை தலைமுடியில் தேய்த்து, குறைந்தது 4 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.
- அதன் பிறகு, தலையை லேசான ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.
- இந்த கலவையை, வாரத்திற்கு 2 முதல் 3 முறை தலைமுடிக்கு தடவலாம்.

இவ்வாறு கொய்யா இலைகள் மற்றும் கற்றாழை கலவையைத் தலைமுடியில் தடவி வர, நரைமுடியை விரைவில் நீக்க முடியும். இது தவிர, நரைமுடி உண்டாவதற்குக் காரணமான ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க, நல்ல உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கையாள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Veppilai For Dandruff: பொடுகு தொல்லையிலிருந்து சீக்கிரம் விடுபட வேப்பிலையை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.
Image Source: Freepik