Ways To Use Neem Leaves For Hair Dandruff: சருமம் மற்றும் முடி இரண்டிற்கும் சிறப்பு கவனிப்பு தேவை. அதன் படி, கூந்தலில் கவனம் இல்லாததால், முடி உடைதல், உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குளிர்காலத்தில் தலைமுடியில் பொடுகு ஏற்படுவது பொதுவானது தான். ஆனால், இது பெரும்பாலான மக்களை தொந்தரவு செய்கிறது.
கூந்தலுக்குக் கவனம் செலுத்தாத போது, எண்ணெய் மற்றும் ஹேர்பேக் பயன்படுத்தாத போது முடியின் ஊட்டச்சத்து குறையலாம். இதனால், பொடுகு பிரச்சனை ஏற்படலாம். இந்த பொடுகு பிரச்சனையை நீக்க பல பொருள்கள் சந்தையின் கிடைக்கின்றன. ஆனால், இதை பயன்படுத்தியும் பொடுகுத் தொல்லை சிலருக்கு நீங்கவில்லையெனில் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். அந்த வகையில் பொடுகு தொல்லை நீங்க வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. இதில் பொடுகு தொல்லை நீங்க வேப்பிலை பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hibiscus For Hair: கரு கரு கூந்தலுக்கு செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க.
பொடுகு பிரச்சனை நீங்க வேப்பிலை பயன்படுத்தும் முறை
தலையில் உள்ள பொடுகு பிரச்சனையை நீக்க கீழே கொடுக்கப்பட்ட வழிகளில் வேப்பிலையைப் பயன்படுத்தலாம்.
தேன் கலந்த வேப்பிலை
தலைமுடியில் வறட்சி ஏற்படுவதால் பொடுகு பிரச்சனை ஏற்படலாம். இதை போக்குவதற்கு வேப்ப இலைகளுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம். தேனில் உள்ள பண்புகள் முடியின் பாக்டீரியா தொற்றுக்களை நீக்க உதவுகிறது. இதற்கு சுமார் மூன்று டீஸ்பூன் வேப்பம் பூ பேஸ்ட் உடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தலைமுடியில் தடவலாம்.
தயிர் மற்றும் வேப்பம்பூ
பொடுகு பிரச்சனையைத் தவிர்க்க தயிருடன், வேப்ப இலைகளை கலந்து பயன்படுத்தலாம். தயிரில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இதற்கு சுமார் இரண்டு ஸ்பூன் வேப்பம் பூ பேஸ்ட் உடன் 1 தேக்கரண்டி தயிர் கலந்து முடியின் வேர்களில் தடவலாம்.
தேங்காய் எண்ணெயுடன் வேப்பம்பூ
வேப்பம் பூவைக் கொண்டு பொடுகு பிரச்சனையை எளிதாக சமாளிக்க முடியும். தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்புப் பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கிறது. இதில் வேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வர பொடுகு பிரச்சனை நீங்கும். மேலும், முடி தொற்று குறைய ஆரம்பிக்கும்.
பொடுகை நீக்க வேப்பம்பூவை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். வேப்பிலை ஆனது பொடுகு மட்டுமல்லாமல், பல்வேறு முடி பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. இது தவிர இரவில் ஆயில் மசாஜ் செய்யலாம். இதில் வேப்பம் பூ மற்றும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Clove Water Hair Benefits: பொடுகுத் தொல்லையை நீக்கும் கிராம்பு நீர். இப்படி பயன்படுத்துங்க.
Image Source: Freepik