Aloevera For Dandruff: தீராத பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட கற்றாழையுடன் இந்த பொருள் சேர்த்துக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Aloevera For Dandruff: தீராத பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட கற்றாழையுடன் இந்த பொருள் சேர்த்துக்கோங்க


Ways To Get Rid Of Dandruff Naturally: தலைமுடி ஆரோக்கியத்திற்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதில் பலரும் அனுபவிக்கும் பிரச்சனைகளில் முடி உதிர்வு, முடி பிளவடைதல், பொடுகு அரிப்பு போன்றவை அடங்கும். அந்த வகையில் பொடுகு தொல்லை நீங்க நாம் வேதிப் பொருள்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்துவதற்குப் பதிலாக இயற்கை முறைகளைக் கையாளலாம். இதில் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட கற்றாழை பயன்படுத்தும் முறை குறித்துக் காணலாம்.

பொடுகு நீங்க கற்றாழை

கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட தாவரமாகும். இவற்றை சருமம், முடி மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தலாம். இதற்கு கற்றாழையில் உள்ள பூஞ்சை காளான் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளே காரணமாகும். இவை பொடுகை நீக்க உதவுகிறது.

கற்றாழையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் முடி மற்றும் உச்சந்தலையைப் பாதுகாக்கிறது. மேலும் இதில் கொழுப்பை உடைக்கும் நொதிகள் நிறைந்துள்ளது. இவை முடியில் இருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Leaves For Hair Fall: முடி உதிர்வு பிரச்சனையை ஈஸியா தடுக்க இந்த இலைகளைப் பயன்படுத்துங்க.

பொடுகு நீங்க கற்றாழை பயன்படுத்தும் முறை

தலையில் பொடுகு பிரச்சனையை சந்திப்பவர்கள் பின்வரும் முறைகளில் கற்றாழையை பயன்படுத்தலாம். தினந்தோறும் இவ்வாறு பயன்படுத்துவது பொடுகு, அரிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.

கற்றாழையுடன் பேக்கிங் சோடா

தலைமுடியில் பொடுகு இருப்பின், கற்றாழையுடன் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவிலும் கற்றாழையைப் போன்று பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இதற்கு 4-5 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்க வேண்டும். பின் இந்த கலவையை உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து முடியைக் கழுவலாம்.

WebMD கூற்றுப்படி, பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது முடியில் இருந்து அதிக எண்ணெயை அகற்ற உதவுகிறது. மேலும் முடியில் ஷாம்பூ அல்லது வேறு ஏதேனும் முடி பராமரிப்புப் பொருள்கள் இருப்பின், அதை எளிதாக அகற்ற உதவுகிறது. எனவே பேக்கிங் சோடாவை தினம் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அலோவேரா உடன் ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகருடன், அலோவேரா கலந்து பயன்படுத்தலாம். இவை இரண்டிலும் பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை பொடுகை அகற்ற உதவுகிறது. இதற்கு 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு தலையை அலசலாம். இந்த கலவையை வாரம் ஒரு முறை தடவி வர பொடுகுத் தொல்லையை நீக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Loss Diabetes: சர்க்கரை நோயினால் முடி உதிர்வு பிரச்சனையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

கற்றாழை மட்டும்

பொடுகுப் பிரச்சனை நீங்க கற்றாழையை மட்டும் பயன்படுத்தலாம். இதற்கு கற்றாழையை எடுத்துக் கொண்டு, அதில் கூழ் அல்லது ஜெல்லை வெளியே எடுக்க வேண்டும். பின் இந்த ஜெல்லை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி சுமார் 1 மணி நேரம் கழித்து தலைமுடியை தண்ணீரில் கழுவலாம். பொடுகு நீங்க கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு 2 முதல் 3 நாள்கள் தடவலாம். கற்றாழையை உச்சந்தலை மற்றும் முடிக்குத் தடவுவது எந்த தீங்கும் விளைவிக்காது.

எலுமிச்சையுடன் கற்றாழை

கற்றாழையை எலுமிச்சையுடன் கலந்து முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் பொடுகு பிரச்சனையை நீக்கலாம். இதற்கு 5 முதல் 6 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும். இந்த கலவையை தலையில் விரல்களின் உதவியுடன் தடவலாம். அதன் பிறகு 1 மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பூ கொண்டு கழுவலாம். இவ்வாறு வாரத்தில் 2 முதல் 3 நாள்கள் செய்து வர பொடுகை நீக்கலாம்.

தலை அல்லது முடியில் பொடுகு தொல்லை இருப்பின் கற்றாழையைப் பயன்படுத்தலாம். கற்றாழையில் நிறைந்துள்ள இதன் பண்புகள் பொடுகை போக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Causes of Dandruff : பொடுகு உண்டாக காரணம் இதுதான்… தெரிஞ்சிக்கிட்டு தவிருங்கள்!

Image Source: Freepik

Read Next

கொத்து, கொத்தாய் முடி கொட்டுதா?… இந்த மோசமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!

Disclaimer